வலைவாசல்:திருநெல்வேலி

இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகராக உள்ள திருநெல்வேலி உள்ளாட்சி அமைப்பில் ஒரு மாநகராட்சியாகும். தமிழகத்தின் பழமையானதும் தென்தமிழகத்தின் பெரிய நகரமானதுமான திருநெல்வேலி1994 ஆம் ஆண்டு முதல் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அப்போது மொத்தம் 3 நகராட்சி பகுதிகளையும் சில ஊராட்சி பகுதிகளையும் சேர்த்து திருநெல்வேலி மாநகராட்சி உருவாக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நகரமாகும். பாண்டியர்களின் தலைநகராகவும் திருநெல்வேலி சிலகாலம் இருந்ததாக கூறப்படுகின்றது. உலகப்புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ஆலயம் அமைந்துள்ள இடமாக திருநெல்வேலி விளங்குகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:திருநெல்வேலி&oldid=1798059" இலிருந்து மீள்விக்கப்பட்டது