நிகழ்பட விளையாட்டுகளை கட்டுப்படுத்துவதற்காக இயக்குபிடி பயன்படுத்தப்படுகின்றது. இவை பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அழுத்தும்-பொத்தான்களை கொண்டுள்ளன. மற்றும் இதன் இயக்க நிலையை கணினி மூலம் படிக்கப்பட இயலும்.
உலங்கு வானூர்தியில் தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் மேலெழும்பும் விசையைப் பெறுகிறது. இவ்விசிறிகள் ரோடர்கள் என்றும் இவ்வானூர்தி ரோடரி விங் வானூர்தி எனவும் அழைக்கப்படுகிறது.
முப்பரிமாண (3D), இருபரிமாண (2D) காட்சிகளையும், நிகழ்பட பிடிப்பு, டிவி-டியூனர் தகவி போன்றவற்றில் வரைவியல் முடுக்கி அட்டைகள் தேவைப்படுகின்றன.
வயலை உழுவதற்கு பயன்படும் உழவு இயந்திரத்தின் மூலம் நிலத்தை உழலாம். மாடுகளில் பூட்டப்படக்கூடிய கலைப்பைகளை விட வலுவான கலப்பைகளை இதில் பூட்டலாம். சீராக விரைவாக இது வயலை உழும். மனித உழைப்பும் குறைக்கப்படுகிறது