தொங்கு பாலத்தில் பாலம் (பளு-தாங்கும் பகுதி) இடைநிறுத்த கம்பிகளுக்குக் கீழே செங்குத்தாகத் தொங்க விடப்படும். இந்த பாலத்தில் கோபுரங்களுக்கு இடையே பக்கவாட்டில் கம்பிகள் இணைக்கப்பட்டிருக்கும் இவை முதன்மை கம்பிகளாகும், மேலும் பக்கவாட்டு கம்பிகளில் இருந்து செங்குத்து இடைநிறுத்த கம்பிகள் இணைக்கப்பட்டு அவை போக்குவரத்து செல்லும் சாலை உள்ள தளத்தின் எடையை தாங்கும்படி அமைக்கப்படுகின்றது.