வலைவாசல்:மருத்துவம்/சிறப்புக் கட்டுரை

பயன்பாடு‎

தொகு

மருத்துவம் சிறப்புக் கட்டுரை துணைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:மருத்துவம்/சிறப்புக் கட்டுரை/வடிவமைப்பு.

Selected articles list

தொகு

வலைவாசல்:மருத்துவம்/சிறப்புக் கட்டுரை/1

மூச்சுத்தடை நோய் அல்லது ஈழை நோய் (ஆஸ்த்துமா) என்பது நுரையீரலில் ஏற்படும் நீடித்த/நாட்பட்ட அழற்சியினால், மீண்டும் மீண்டும் வரக்கூடிய மூச்சு எடுத்தலில் சிரமத்தைக் கொடுக்கும் மூச்சுத்திணறல்/மூச்சிரைப்பு நிலை ஆகும். இதற்கு முக்கிய காரணம் சுவாசக் குழாய்களின் உட்படலத்தில் ஏற்படும் வீக்கத்தால், காற்று உட்சென்று வெளியேறும் பாதையில் ஒடுக்கமேற்பட்டு, காற்றின் ஓட்டத்தில் ஏற்படும் வீழ்ச்சியாகும். சுவாசக் குழாய்களைச் சுற்றியிருக்கும் தசைகளில் ஏற்படும் மீளும் தன்மை கொண்ட சுருக்கம், இறுக்கம் போன்றவையும், நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படும் புண்பட்ட நிலை, வீக்கம் என்பனவும் அசெளகரியமான நிலையை ஏற்படுத்தும். இதன் தீவிரத்தன்மையும் , நிகழ்வுகளுக்கிடையிலான இடைவெளியும் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். இந்த நோய் எல்லா வயதினரிலும் காணப்படுவதாயினும், பொதுவாக குழந்தைகளிலேயே ஆரம்பிக்கும். இந்த நோயின் முக்கியமான அறிகுறிகளாக இழுப்பு, இருமல், நெஞ்சு இறுக்கம், விரைவான, குறுகிய மூச்சு என்பன அமைகின்றன.

இந்த ஈழை நோயானது தொய்வு, இழுப்பு, முட்டு, சுவாச முட்டு, மூச்சுத் தடை நோய், மூச்சுப் பிடிப்பு நோய் என பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது.


முன்மொழிதல்

தொகு

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் சிறப்புக் கட்டுரைகளின் தொடுப்பை இங்கு முன்மொழியவும்.

  1. தற்போது எதுவும் இல்லை.