வலை வீசின படலம்
வலை வீசன படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் திருவாலவாய்க் காண்டத்தில் வருகின்ற ஐம்பத்து எழாவது படலமாகும். உமையம்மையும், நந்திதேவரும் கவனக்குறைவால் சாபம் பெற்று, பிறகு சிவபெருமானின் அருளால் சாபம் நீங்க பெற்றதை இப்படலம் குறிப்பிடுகிறது.
படலச் சுருக்கம்
தொகுஉமையம்மையின் சாபம்
தொகுசிவபெருமான் கைலாய மலையில் உமையம்மைக்கு வேதத்தின் பொருளை விளக்கிக் கொண்டிருந்தார். உமையம்மை அதில் கவனத்தைச் செலுத்தாமல் இருந்தார். வேதத்தின் பொருளை உதாசினப்படுத்திய காரணத்தால் படிப்பறிவு இல்லாத மீனவப் பெண்ணாக பிறக்க என்று சாபமிட்டார்.
விநாயகர், முருகனின் சினம்
தொகுஉமையம்மைக்குச் சாபம் கொடுத்ததை அறிந்த விநாயகரும், முருகப்பெருமானும் சினம் கொண்டு, வேத நூல்களைத் தூக்கி கடலில் வீசினார்.
நந்திதேவரின் சாபம்
தொகுவிநாயகரையும், முருகப்பெருமானையும் முறையாக நந்திதேவர் தடுக்காமல், கைலாய மலைக்குள் அனுமதித்ததால் சுறா மீனாக கடலில் பிறக்க என்று சாபமிட்டார்.
புன்னை மரநிழலில் அன்னை
தொகுசிவபெருமானின் சாபத்தின் படி, பாண்டிய நாட்டில் ஒரு புன்னை மரநிழலில் உமையம்மை சிறுகுழந்தையாகக் கிடந்தார். மகப்பேறு இல்லாது சிவபெருமானிடம் வேண்டிய பரதவத் தலைவன் சிவபெருமானே இக்குழந்தையை தனக்கு வழங்கியதாகக் கருதி தன் மனைவியிடம் குழந்தையினைக் கொடுத்து வளர்த்து வந்தார். நந்திதேவரும் கடலில் வீசப்பட்ட வேத நூலினை எடுத்துக் கொடுத்து, கடலில் சுறாமீனாகச் சுற்றி திரிந்தார்.
பரதவத் தலைவன் அறிவிப்பு
தொகுசுறாமீனாகச் சுற்றி திரிந்த நந்திதேவர், கடலில் மீன்பிடிக்க வருபவர்களின் வலைகளையும், படகுகளையும் சேதப்படுத்தியது. பரதவத் தலைவன் இச்சுறாவினை அடக்குபவருக்கு தனது மகளை மணம் செய்து தருவதாக அறிவித்தார்.
உமையம்மை, நந்திதேவரின் சாபம் நீங்குதல்
தொகுசிவபெருமான் மீனவனாகத் தோன்றி, சுறாமீனாகச் சுற்றி திரிந்த நந்திதேவரை வலைவீசிப் பிடித்தார். பரதவத் தலைவன் ஒப்பந்தத்தின் படி தனது பெண்ணை மணம் முடித்துக் கொடுத்தார். நந்திதேவரும் தனது சுயரரூபம் பெற்றார். உமையம்மையும், நந்திதேவரும் சாபம் நீங்கப் பெற்றனர்.[1][2]
ஆதாரங்கள்
தொகு- ↑ சீனிவாசன், பேரா டாக்டர் ரா. "திருவிளையாடற் புராணம்/57 - விக்கிமூலம்". ta.wikisource.org. பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.
- ↑ "வலை வீசிய படலம்!". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.