வல்லுனர் மல்லாடல்

வல்லுனர் மல்லாடல் அல்லது புரொஃபொசனல் மல்லாடல் (Professional wrestling) என்பது ஒரு நிகழ் கலை ஆகும். முன்னரே முடிவு செய்யப்பட்ட போட்டிகளை, பார்வையாளர்கள் முன் பாவனை செய்து மகிழ்விப்பதே இக் கலையாகும். இக் கலை நடிப்புச் சண்டை, நாடகக் கூறுகள், வேடம், வித்தைகள் போன்றவற்றின் கூறுகளைக் கலந்தது. வட அமெரிக்காவிலும், யப்பானில் மிகவும் வரவேற்பை இது பெற்றிருக்கிறது. உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் மல்லாடலை நிகழ்த்துவதில் முதன்மை நிறுவனமாக இருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லுனர்_மல்லாடல்&oldid=2755899" இருந்து மீள்விக்கப்பட்டது