வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்

கல்விக் கட்டணம் or கல்வி கட்டணம் ethu sari nga sir

தமிழின் 18 மெய்யெழுத்துகளை வல்லினம் (6), மெல்லினம் (6), இடையினம் (6) என்று மூன்று பிரிவாகப் பிரிப்பர். மெய்யெழுத்துகள் 18-இல், க, ச, ட, த, ப, ற ஆகிய 6 எழுத்துகள் மட்டுமே வல்லெழுத்துகள் ஆகும். இவற்றுள் ட, ற ஆகியவை இரண்டும் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வாரா. வல்லின எழுத்துகளுள் க, ச, த, ப ஆகிய நான்கு மட்டுமே ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும்.


தமிழில் சில சொற்களுக்குப் பின்னர் வரும் சொற்களில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் இருந்தால் அவ்விரண்டு சொற்களுக்கும் இடையே வல்லின மெய் எழுத்து மிகும். இவ்வாறு மிகும் இடங்களில் க், ச், த், ப் என்ற வல்லெழுத்துகள் தோன்றும். இவை உரிய இடங்களில் வரவில்லையானால், அந்தத் தொடரிலோ வாக்கியத்திலோ பொருளின் பொருத்தமும், உரிய அழுத்தமும், ஓசை நயமும், தெளிவும் இருக்காது. சில நேரங்களில் பொருள் வேறுபாடும் ஏற்பட்டு விடும்.

வல்லெழுத்துகள் மிகும் இடங்கள்

தொகு

அ, இ, உ சுட்டெழுத்துக்களின் பின்

தொகு
  • அ + காலம் = அக்காலம்
  • இ + சமயம் = இச்சமயம்
  • உ + பக்கம் = உப்பக்கம் ('உ' எனும் சுட்டெழுத்து வழக்கில் இல்லை)

எ என்னும் வினா எழுத்தின் பின்

தொகு
  • எ + பொருள் = எப்பொருள்

அந்த, இந்த, எந்த என்னும் அண்மை, சேய்மைச் சுட்டுக்கள் பின்னும் ,வினாச் சுட்டுக்களின் பின்னும் வரும்

தொகு
  • அந்த + காலம் = அந்தக் காலம்
  • இந்த + சிறுவன் = இந்தச் சிறுவன்
  • எந்த + பையன் = எந்தப் பையன்

அப்படி, எப்படி, இப்படி என்னும் சொற்களின் பின்

தொகு
  • அப்படி + கேள் = அப்படிக் கேள்
  • இப்படி + சொல் = இப்படிச் சொல்
  • எப்படி + பார்ப்பது = எப்படிப் பார்ப்பது

இரண்டாம் வேற்றுமை அசை உருபுக்குப்பின் (ஐ)

தொகு
  • அவனைக் கண்டேன்
  • செய்யுளைச் சொன்னேன்
  • அவளைத் தேடினேன்
  • குறளைப் படித்தேன்

நான்காம் வேற்றுமை உருபுக்குப்பின் (கு)

தொகு
  • அவனுக்குக் கொடுத்தேன்
  • அவளுக்குச் சொன்னேன்

என, ஆக என்ற சொற்களுக்குப்பின்

தொகு
  • எனக் கூறினான்
  • அவனாகச் சொன்னான்

வல்லெழுத்து மிகா இடங்கள்

தொகு

அது, இது, எது என்னும் சொற்களின் பின் [1]

தொகு
  • அது காண்
  • எது செய்தாய்
  • இது பார்

ஏது, யாது என்னும் சொற்களின் பின்

தொகு
  • ஏது கண்டாய்
  • யாது பொருள்

அவை, எவை, இவை, யாவை

தொகு
  • அவை பெரியன
  • யாவை போயின

அத்தனை, எத்தனை, இத்தனை[2]

தொகு
  • அத்தனை செடி[3]
  • எத்தனை பசு[4]
  • இத்தனை பசு.[5]

அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு

தொகு
  • அவ்வளவு தந்தாய்
  • எவ்வளவு செய்தாய்
  • இவ்வளவு துணிவு

அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின் (இஃது எழுவாய்த்தொடர் ஆகையால் மிகாமலும், குற்றியலுகரச் சுட்டு ஆதலின் மிக்கும் வரும்)[6]

தொகு
  • அங்கு செல்
  • எங்கு கற்றாய்
  • இங்கு பார்

சில மென்றொடர்க் குற்றியலுகரத்திற்குப்பின்

தொகு
  • அன்று சொன்னான்
  • சங்குபட்டி
  • என்று தந்தான்
  • இன்று கண்டான்
  • மென்று தின்றார்
  • வந்து சேர்ந்தான்

சில வினையெச்ச விகுதிக்குப்பின்

  • நடந்து சென்றான் [7]
  • தந்து போனான்
  • சென்று திரும்பினான்



(விரியும்)

உசாத்துணை

தொகு

இந்த இலக்கண குறிப்பில் வரும் உள்ளடக்கம் புலவர் அ.சா. குருசாமி அவர்களால் எழுதப்பட்ட தமிழில் பிழைகள் தவிர்ப்போம்! என்ற நூலையும் மயிலை சின்னத்துரை சண்முகம் அவர்கள் எழுதிய, தமிழில் பிழையின்றி எழுதுவோம் (சென்னை:1986) என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டவை. இங்குக் குறிப்பிடப்படும் உதாரணங்களும் அந்நூல்களிலிருந்து பெறப்பட்டவையே.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளத்தில் இந்தத் தலைப்பின் கீழ் மிகத் தெளிவான, விளக்கமான, பயனுள்ள குறிப்புகள் இருக்கின்றன.

வெளியிணைப்பு

தொகு
  1. http://light-myothers.blogspot.com/2009/11/blog-post.html
  2. http://tamilvu.org/courses/degree/c021/c0214/html/c0214661.htm
  3. http://tamilvu.org/courses/degree/c021/c0214/html/c0214662.htm
  1. எழுவாய்த்தொடர்
  2. பொருளுக்கே புணர்ச்சி
  3. இங்கு அத்தனை என்பது வியக்கும் கருத்தினை வெளிப்படுத்தும் தொகுப்புக்குறி. இங்கு ஒற்று மிகாது.
  4. எத்தனையோ பசு என்று பொருள் படுவதால் ஒற்று மிகவில்லை.
  5. எண்ணிக்கை கேட்கும் வினா
  6. இது எழுவாய்த்தொடர் ஆகையால் மிகாமலும், குற்றியலுகரச் சுட்டு ஆதலின் மிக்கும் வரும்
  7. மென்றொடர்க் குற்றியலுகரம்