வளர்பிறை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சூரியன் சந்திரன் பூமி ஆகியவை கிட்டதட்ட நேர்கோடாய் அமைவது அமாவாசை (conjunction ). அதற்கடுத்த நாட்களில் சூரியனில் இருந்து கிட்டத்தட்ட 12 டிகிரிக்கு மேல் விலகிய நிலையில் முதல் பிறை ( crescent )(هلال) மெல்லிய கீற்றாக சூரியன் மறைந்ததும் மேற்கு வானில் தெரியும். அடுத்த்டுத்த் நட்களில் சூரியனில் இருந்து சந்திரனின் விலகல் கோணம் அதிகரிக்கும்போது அது உருவில் வளரும். ஏழாம் நாள் கோணவிலகல் கிட்டத்தட்ட 90 டிகிரி இருக்கும் நிலையில் சூரியன் மறையும் வேளையில் சந்திரன் தல்லைக்கு மேல் பாதியாக காட்சியளிக்கும். இவ்வாறு கோணதூரம் (Angular distance ) அதிகரித்து 14ஆம் நாள் கிட்டத்தட்ட 180 டிகிரீ விலகிய நிலையில் சூரிய மேஎற்கூ வானில் மறையும்போது சந்திரன் கிழக்கு வானில் முழு நிலவாய் ( full moon بدر ) தோன்றும். சந்திரனின் முதல் பிறையில் இருந்து 14ஆம் நாள் வரை வளர் பிறையாகும். (waxing moon). 14ஆம் நாளுக்கு பின் சூரிய சந்திர கோணவித்தியாசம் குறைய ஆரம்பிக்கிறது. சந்திரன் தேய் பிறையாக(waning moon) மாறுகிறது. முஸ்லிம்கள் முதல் பிறை தெரிந்ததும் மாதத்தை துவங்குகின்றனர்.