வளர்பிறை துவிதியைத் திதி

அமாவாசை கழித்து இரண்டாம் நாள் வரும் துவிதியைத் திதி வளர்பிறை துவிதியைத் திதி எனப்படும். பல குடும்பங்களிலும் இந்த துவிதியைத் திதி சிறப்பானதாக கருதப்படுகிறது.

துணிகள் வாங்குவதற்கு உகந்த நாள் தொகு

வழக்கமாக திருமணத்திற்காக மணப்பெண்ணிற்கு கூரைப் புடவை மற்றும் பட்டு புடவைகள் தேர்ந்தெடுத்து வாங்க அல்லது பண்டிகைகளுக்கு குடும்பத்தாருக்கு துணிமணிகள் வாங்க சிறந்த நாள் இந்த வளர்பிறை துவிதியைத் திதி என்பது ஒரு மரபு சார்ந்த நம்பிக்கை. இந்த திதியில் துணி வாங்கினால் ஆண்டு முழுவதும் துணிகள் சேர்ந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறார்கள். சுவாமி அல்லது அம்மனுக்கு நேர்த்திக் கடனாக துணிகள் சார்த்தி வழிபட வளர்பிறை துவிதியைத் திதியே சிறந்த நாளாகும்.

திருவண்ணாமலை கிரிவலம் தொகு

வளர்பிறை துவிதியைத் திதியன்று திருவண்ணாமலை மலையை கிரிவலம் சுற்றி வந்து அங்குள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கினால் மிகுந்த பலனுண்டு என்பது கிரிவம் செய்யும் பக்தர்களிடையே நிலவி வரும் நம்பிக்கை