வளி ஒவ்வாமை ஊக்கி

(வளிவொவ்வாமையூக்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வளிவொவ்வாமையூக்கிகள் என்பது காற்றின் வாயிலாக ஒவ்வாமையை உண்டுச்செய்யும் காரணிகளைப் பற்றியதாகும். வளிவொவ்வாமையூக்கிகளில் குறிப்பாகப் பூக்களின் மகரந்தம் மற்றும் பூஞ்சைகளின் வித்து மற்றும் நுண்ணுயிர், தாவரம் மற்றும் பூச்சிகளில் இருந்து வெளிப்படும் நொதிகள் ஒவ்வாமையை உண்டாக்குவணவாக உள [1].

பூஞ்சைகளால் வெளியிடப்படும் வித்தை காட்டும் காணொளி.

இவ்வளி ஒவ்வாமைகளால் மூக்கழற்சி/நாசியழற்சி (ரைனடிசு/ஃஏ ஃபீவர்) மற்றும் ஈழைநோய் (ஆசுதுமா) என பரவலாக அறியப்படும் நோய்கள் மனிதரிடத்தில் வருகின்றன. இவைகளை பெரிதும் உண்டாக்குபவை தாவர மகரந்தமும் பூஞ்சை வித்துக்களேயாகும். இந்நோய்கள் புறத்தில் உலாவுவதால் மட்டுமல்லாமல் மாசடைந்த வீட்டின் அகச்சூழ்நிலையும் காரணமாக அமைகின்றன [2]. இது மட்டுமல்லாமல் இயற்கையில் மனிதனின் ஊடுருவலால் ஏற்படும் சூழ்நிலை மற்றும் பருவ மாற்றங்களும் இவ்வொவாமையூகிகளின் பரவலுக்குக் காரணமாகின்றன.[3]

வரலாறு

தொகு

சான் போச்டாக் என்னும் அறிஞர் 1819 முதன் முதலில் நாசியழற்சி நோயையை விவரித்திருக்கிறார், ஆனால் 1873ல் சார்லசு ப்ளாக்லி தான் முதலில் இந்நோய் மகரந்தத்தால் வருகிறது என்று கூறினார். 1921 ல் கெர்ன் என்னும் மருத்துவர் ஈழைநோயுற்றவரிடம் செய்தச் சோதனையில் சுத்தமில்லா படுக்கையைப் பயன்படுத்துவதாலையே வந்துள்ளது என்று அறிந்துள்ளார் [4]. இதன் காரணமாக சுத்தம் செய்துப் பயன்படுத்தியதில் நோயின் தாக்கம் குறைந்தது உறுதியானது. 1925 ல் ச்டாம் வான் லியூவன் என்னும் மருத்துவர் ஈழை நோயாளியை உயர்ந்தப் பகுதகளுக்கும் மற்றும் ஒவ்வாமையூக்கி தடை அறையின் உதவிக்கொண்டும் சிகிச்சை அளித்துள்ளார் [5].

வகைகள்

தொகு

இது இரு வகையாக அது தொற்றும் சூழ்நிலையை வைத்து பிரிக்கின்றனர். அவை அகம் மற்றும் புறச்சூழல் ஒவ்வாமையூக்கிகளாகும்.

அகச்சூழல்

தொகு

இதன் தாக்கம் சரியாக விவரிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் நோயாளியின் முயற்சியின்றி இதைக் கட்டுப்படுத்துவதுச் சிரமமாகவேக் காணப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்கனவாக தூசுப்புரத ஒவ்வாமை (Atopic disease) என விளிக்கப்படும் நோய் சில நாடுகளில் 80% மேற்பட்ட மக்களிடம் பெரிதும் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் இவைப் பெரும் பிரச்சனையாகவே உருவெடுத்துள்ளது.

ஆசுதுமா எனப் பரவலாக அறியப்படும் ஈழைநோய் வயந்துவந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டும் குழந்தைகளிம் 80% மேற்பட்டுக் காணப்படுகிறது. இவை மற்றும் சில ஒவ்வாமையூக்கிகளால் கொடுரமான நோய்த்தாக்கும் சில சமையங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஆண்டுக்கு 2,50,000 மேற்பட்ட மக்கள் உலகில் இறப்பதற்கு ஈழைநோய் காரணமாகிறது [6]

இதற்கு பெரிதும் காரணமாக அமைவதுச் சுத்தமற்ற அகச்சூழ்நிலையும், மாசும் தூசும், நோய்க்காரணிகளும் சூழலில் மிகுந்து உலாவுவதலாலும் 90% மேலுள்ள மக்கள் அகச்சூழ்நிலையில் வாழ்வைக் கழிப்பதுமே முதன்மையாகும்[7]. பொதுவான அகச்சூழல் ஒவ்வாமையூக்கிகள் கீழேயுள்ளச் சட்டகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுப்பெயர் அறிவியற் பெயர் கூடுதலாகக் காணப்படும் இடங்கள் காரணி
தூசு உண்ணி Dermatophagoides pteronyssinus, Dermatophagoides farinae படுக்கை, இருக்கை,விரிப்பு உணியின் உடல் மற்றும் அதன் கழிவு
நாய், பூனை Felis domesticus,Canis familiaris படுக்கை, இருக்கை விரிப்பு,உமிழ்நீர் சுரப்புறுப்பும் மற்றும் அதன் நெய்ச்சுரப்புறுப்பு
கரப்பான் பூச்சி Blattella germanica,Periplaneta americana அடுப்பாங்கறை எச்சில், கழிவு, சுரப்புக்கள் மற்றும் இறந்த கூடுகள் மற்றும் உடலுறுப்புக்கள்
பூஞ்சை Alternaria alternata ,Cladosporium herbarium, Aspergillus fumigatus பெரும்பாலான வித்து கோப்பு ஆவணம்: http://emedicine.medscape.com/article/137911-overview#aw2aab6b3

புறச்சூழல்

தொகு

அக மற்றும் புறச்சூழல் இரண்டும் உணர்ச்சியையும் ஒவ்வாமை நோய்களையும் தோற்றுவிக்கின்றன. குறிப்பாக இருச் சூழலும் ஈழை மற்றும் நாசியழற்சியை உண்டாக்குகின்றன. அவை உண்டாக்கும் புறக்காரணிகள் சில: மரம், செடி, களை மற்றும் புற்களின் மகரந்தமே பெரிதும் காரணமாகின்றன. இதைத் தவிர்த்து மாசடைந்தச் சூழல் மற்றும் பூஞ்சான வித்துக்கள் காரணமாகின்றன[8].

மருத்துவம்

தொகு

நோய் தொற்றுதலுக்கு முன்பே ஆரோக்கியமானச் சூழலி உலாவுதல் அது குறித்த அறிவே நோயின் தாக்கத்தை பாதியாகக் குறைக்கும். சுத்தமானச் சூழல் மற்றும் அதைப் பரமாரித்தலே இதனால் ஏற்படும் மருத்துவச் செலவை பாதியாகக் குறைக்க வல்லது [9].

மேற்கோள்கள்

தொகு
  1. STEWART GA, and THOMPSON PJ, (1996), The biochemistry of common aeroallergens. Clinical & Experimental Allergy, 26: 1020–1044. doi: 10.1111/j.1365-2222.1996.tb00641.x
  2. http://www.worldallergy.org/esp/apawg_0109.pdf
  3. Beggs PJ, (2004), Impacts of climate change on aeroallergens: past and future. Clinical & Experimental Allergy, 34: 1507–1513. doi: 10.1111/j.1365-2222.2004.02061.x
  4. Kern RA. Dust sensitization in bronchial asthma. Med Clin North Am. 1921;5:751
  5. Storm van Leeuwen W. Allergic diseases: diagnosis and treatment of bronchial asthma, hay fever and other allergic diseases. Philadelphia, Pa: JB Lippincott; 1925
  6. Salo PM, Arbes SJ Jr, Crockett PW, Thorne PS, Cohn RD, Zeldin DC. Exposure to multiple indoor allergens in US homes and its relationship to asthma. J Allergy Clin Immunol. Mar 2008;121(3):678-684.e2
  7. Salo PM, Sever ML, Zeldin DC. Indoor allergens in school and day care environments. J Allergy Clin Immunol. Aug 2009;124(2):185-92, 192.e1-9; quiz 193-4
  8. Salo PM, Jaramillo R, Cohn RD, London SJ, Zeldin DC. Exposure to mouse allergen in U.S. homes associated with asthma symptoms. Environ Health Perspect. Mar 2009;117(3):387-91
  9. Steven L Cole, Indoor Aeroallergens, http://emedicine.medscape.com/article/137911-overview#a30
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளி_ஒவ்வாமை_ஊக்கி&oldid=2745009" இலிருந்து மீள்விக்கப்பட்டது