வளையப்பந்து

வளையப்பந்து (Tennikoit) என்பது பூப்பந்தைப் (Tennis) போன்ற ஒரு வகை விளையாட்டாகும் .இதற்கும் பூப்பந்து விளையாடுவதற்கு ஏற்ற ஆடுகளம்போல் ஆடுகளம் தேவை .வளையப்பந்து விளையாடுவதற்கு வட்டமான இரப்பர் வளையப்பந்து அடிப்படைத் தேவையாகும். இந்த விளையாட்டை விளையாடும் இரு விளையாட்டு வீரர்களைப் பிரிக்கும் வகையில், ஒவ்வொருவரும் தனது பிடிப்பை மோதலின்றி பிடிக்க ஆடுகளத்தின் குறுக்கே வலை அமைக்கப்பட்டிருக்கும். வளையப்பந்து குறிப்பாக ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா[2], பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த விளையாட்டு உட்புற மற்றும் வெளிப்புற மைதானங்களில் விளையாடப்படுகிறது.

வளையப்பந்து
2010 உலக சாம்பியன்ஷிப் (மகளிர் இரட்டையர்) வளையப்பந்து (டென்னிகாய்ட்),
பிற பெயர்கள்வளையப்பந்து (டென்னிகாய்ட்)
முதலில் விளையாடியது
  • தெளிவில்லை
  • யேர்மனிய தொடக்கம் உள்ளதாக சில குறிப்புக்கள் உள்ளது.[1]
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
தொடர்புஇல்லை
அணி உறுப்பினர்கள்
  • ஒற்றையர்
  • இரட்டையர்
  • கலப்பு இரட்டையர்
இருபாலரும்
  • ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனி போட்டிகள்
  • கலப்பு அணிகள்:
    1 ஆண் 1 பெண்
பகுப்பு/வகைஉள் அல்லது வெளியரங்கம்
கருவிகள்ரப்பர் வளைய பந்து
தற்போதைய நிலை
ஒலிம்பிக்இல்லை
இணை ஒலிம்பிக்இல்லை

இவ்விளையாட்டு பல வகைகளில் விளையாடப்படுகிறது. "ஒற்றையர் பிரிவு" என்பது இரண்டு எதிரெதிர் வீரர்கள் தேவைப்படும் இரண்டு வீரர்கள் மட்டுமே கொண்ட பிரிவாகும். "இரட்டையர் பிரிவு" என்பது நான்கு வீரர்களைக் கொண்ட பிரிவாகும், ஒவ்வொரு அணியும் தலா இரண்டு வீரர்களைக் கொண்ட இரண்டு அணிகள் ஒருவருக்கொருவர் எதிரெதிர் மோதுகின்றன, "கலப்பு இரட்டையர் பிரிவு" போட்டியில், ஒரு ஆண் வீரரும், ஒரு பெண்ணும் இணைந்து அணியை உருவாக்குகிறார்கள்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Kerala Tennikoit Association". Keralatennikoit.com. பார்க்கப்பட்ட நாள் 30 December 2014.
  2. Rao, G. Narasimha (12 February 2016). "'Lack of government support hits tennikoit'". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 29 March 2021.
  3. "Kerala Tennikoit Association". keralatennikoit.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 April 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளையப்பந்து&oldid=4064181" இலிருந்து மீள்விக்கப்பட்டது