வள்ளம் என்பது நீரில் பயணிக்க, மீன்பிடிக்கப் பயன்படும் ஒரு நீரூர்தி ஆகும். இது பாய்மரப் படகு, கப்பல் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் சிறியது. உலகில் பல பாகங்களில் வள்ளம் அல்லது வள்ளத்தை ஒத்த நீரூர்திகள் மிக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் நிலப்பரப்புகளிலும் வள்ளம் பண்டைக் காலத்தில் இருந்து கட்டப்படும், பயன்படுத்தப்படும் ஒரு நீரூர்தி ஆகும்.

பாகங்கள்

தொகு

பின்வரும் கலைச்சொற்கள் ஈழத்தில் குருநகர் பகுதியில் பயன்படுத்தப்படுவன. தமிழ்நாட்டில், ஈழத்தின் பிற பகுதிகளில் இவை வேறுபடலாம்.

  • அணியம் - வள்ளத்தின் முன்பக்கம்
  • மோசாவாரி -
  • ஒட்டம் - படகின் நீளுக்கும் வங்குகளின் நுணியில் இணைக்கப்பட்டு இருக்கும் பலகை.
  • வங்கு - U வடிவில் படகின் அடிப்பாகத்தை உருவாக்கப் பயன்படும் திரட்சியான மரத்தில் வடிவமைக்கப்படும் பலகை.
  • கூத்துவாரி - படகின் நடுவில் குறுக்காக போடப்பட்டு இருக்கும் தடித்த பலகை. இதில் வட்டமாக வெட்டியெடுத்து அதற்குள்ளே பாய் மரக் கம்பை வைக்கலாம்.
  • பூவெச்சம் - பாய்மரக் கம்பின் அடியை தாங்கும் வண்ணம் வங்கில் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் குழி.
  • கடையல் - வள்ளத்தின் பின்பக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளம்&oldid=1910735" இலிருந்து மீள்விக்கப்பட்டது