வள்ளலாரும் அருட்பாவும் (நூல்)

வள்ளலாரும் அருட்பாவும் என்பது கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல். இந் நூலுக்கு ஜி ஆர் தாமோதரன் அணிந்துரை எழுதியுள்ளார். 19ஆம் நூற்றாண்டில் தோன்றி பெரும் சமய புரட்சி செய்த வள்ளலார் பற்றியும் அவர் எழுதிய அருட்பா பற்றியும் எழுதப்பட்ட நூல் இது. முதல் 27 பக்கங்களில் வள்ளலாரின் வாழ்க்கைக் குறிப்பை எளிய நடையில் அளிக்கிறார். பின்பு மீதி உள்ள பக்கங்கள் அனைத்திலும் சமூக மற்றும் சமய நெறியில் அருட்பாவின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.

வள்ளலாரும் அருட்பாவும்
‎வள்ளலாரும் அருட்பாவும்
நூலாசிரியர்கி. ஆ. பெ. விசுவநாதம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைகட்டுரை
வெளியீட்டாளர்பாரி நிலையம்
வெளியிடப்பட்ட நாள்
1990
பக்கங்கள்48