வள்ளி (கொடி)
வள்ளிக்கொடி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம்
|
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Monocots
|
வரிசை: | Dioscoreales
|
குடும்பம்: | Dioscoreaceae
|
பேரினம்: | Dioscorea
|
இனம்: | D. pentaphylla
|
இருசொற் பெயரீடு | |
Dioscorea pentaphylla L. | |
வேறு பெயர்கள் [1] | |
|
வள்ளி (Dioscorea pentaphylla) என்பது இதன் பெயர் இது ஒரு கொடி வகையாகும். இக்கொடியிலிருந்து வள்ளிக்கிழங்கு கிடைக்கிறது. இதன் வேறு பெயர் வள்ளைக்கொடி என்பதாகும்.
சங்கப்பாடல்களில் வள்ளிக்கொடியும், வள்ளிப் பூவும்
தொகு- குறிஞ்சிநிலப் பெண்கள் குவித்து விளையாடிய 99 பூக்களில் ஒன்று வள்ளிமலர்.[2]
- வாடாத வள்ளிக்கொடி வாடும் வறட்சி.[3]
- வள்ளிக்கொடி வாடியும், தழைத்தும் காணப்படும்.[4]
- வள்ளிக்கோடி போன்றது பெண் இடுப்பு [5][6]
- வள்ளி என்பது பற்றிப்படரும் கொடி.[7]
- வள்ளிக்கொடி மரத்திலும் படரும்.[8]
- வள்ளிக்கொடி போல் மகளிர்க்குக் கூந்தல் தொங்கும்.[9]
- வள்ளிக்குக் கிழங்கு உண்டு.[10]
- பாரியின் பறம்புமலையின் 4 வளங்களில் ஒன்று வள்ளிக்கிழங்கு [11]
- வள்ளியங்காடு
- வள்ளியங்கானம்
- வள்ளிப்பூ மலர்ந்திருப்பது வள்ளியங்கானம்.[14]
- வள்ளிக்கொடி சுற்றிய மாலை
- கடம்பமலரை இடையில் வைத்துக் கருமையான வள்ளிக்கொடியைச் சுற்றிக் கட்டிய மாலையை முருகப் பெருமானுக்கு அணிவிப்பர்.[15]
இதையும் காண்க
தொகுவெளியிணைப்புகள்
தொகு- வள்ளிக்கொடி - படம். பி.எல்.சாமி முதலான அறிஞர்கள் காட்டுவது.
அடிக்குறிப்பு
தொகு- ↑ Kew World Checklist of Selected Plant Families
- ↑ குறிஞ்சிப்பாட்டு 79
- ↑
ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரிந்தற்று - திருக்குறள் 1304 - ↑
பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,
பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்!
வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத
கானம் கடந்து சென்றார்? - ஐந்திணை ஐம்பது 8 - ↑ வள்ளி நுண்ணிடை அகநானூறு 286-2,
- ↑ வள்ளிமருங்குல் புறநானூறு 316-9
- ↑ காதலி … அல்கலும் வள்ளியின் பிணிக்கும் - நற்றிணை 269-7,
- ↑ வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல் - அகநானூறு 52-1
- ↑ முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின் புறன் அழிந்து ஒலிவரும் தாழிருங் கூந்தல் - நற்றிணை 295-1
- ↑ வள்ளி கீழ் வீழா - கலித்தொகை 39-12
- ↑ கொழுங்கொடி வள்ளி கிழங்கு வீய்க்கும்மே (வெதிர் என்னும் மூங்கில்-நெல், பலா, தேன் ஆகியவை ஏனை 3) - புறநானூறு 109-6
- ↑ எதிர் செல் வெண்மழை பொழியும் திங்களின் முதிர்வாய் வள்ளியங்காடு - முல்லைப்பாட்டு 101,
- ↑ பாசிலை வாடா வள்ளியங்காடு இறந்தோரே – குறுந்தொகை 216
- ↑ மலர்ந்த வள்ளியங்கானம் கிழவோன் - ஐங்குறுநூறு 250
- ↑ கருளுடை வள்ளி இடை தொடுபு இழைத்த உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடக் கமழ் தார் - பரிபாடல் 21-10