வள்ளுவப்பாடி நாடு

வள்ளுவப்பாடி நாடு என்பது திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் கண்ணனூர் என்னும் ஊரை மையமாகக் கொண்ட நாட்டுப்பகுதி எனத் தெரியவருகிறது.[1] இப்பகுதியில் இக்காலத்திலும் வள்ளுவன் குடியைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இந்த வள்ளுவப்பாடி நாடுதான் புகழேந்திப் புலவரைப் போற்றிப் பேணிய சந்திரன் சுவர்க்கியின் மள்ளுவநாடு எனச் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார் என்று மு. அருணாசலம் தெரிவிக்கிறார்.[2]

அடிக்குறிப்பு தொகு

  1. இராசராச சோழ தேவன் (985-1014) காலத்துக் கல்வெட்டு, கண்ணனூர் சுந்தர ராசப் பெருமாள் கோயில் கல்வெட்டு.
  2. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 13-ஆம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 23
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளுவப்பாடி_நாடு&oldid=1193778" இலிருந்து மீள்விக்கப்பட்டது