வழக்கெல்லைக்கோடு

வழக்கெல்லைக்கோடு (isogloss) என்பது, உயிரெழுத்து ஒன்றின் உச்சரிப்பு, சொல்லொன்றின் பொருள், தொடரியல் அம்சம் ஒன்றின் பயன்பாடு போன்ற குறித்த மொழியியல் அம்சம் ஒன்றின் புவியியல் எல்லை ஆகும். முக்கியமான கிளைமொழிகள் பொதுவாக ஒரு தொகுதி வழக்கெல்லைக்கோடுகளினால் எல்லைப்படுத்தப்படுகிறது. பென்ராத் கோடு உயர் செருமனையும், மேற்கு செருமானிய மொழிகளையும் வேறுபடுத்துகின்றது. லா இசுப்பெசியா-ரிமினி கோடு வடக்கு இத்தாலியக் கிளைமொழிகளையும், மத்திய இத்தாலியக் கிளைமொழிகளையும் வேறுபடுத்துகிறது. ஒரு தனி வழக்கெல்லைக்கோடு, ஒரு மொழி எல்லைக்கோட்டுடன் பொருந்தலாம் அல்லது பொருந்தாமல் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, /y/ இன் முன் குவிவு, பிரான்சு, செருமனி ஆகியவற்றுக்கு இடையேயான எல்லையைக் கடந்து செல்கிறது. அதேவேளை, /y/ ஐக் கொண்டுள்ள பிரெஞ்சுச் சொற்களுக்கு இணையான இத்தாலிய, எசுப்பானியச் சொற்களில் /y/ இருப்பதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழக்கெல்லைக்கோடு&oldid=2749413" இலிருந்து மீள்விக்கப்பட்டது