வழிகாட்டி அடையாளம்
வழிகாட்டி அடையாளம் எனப்படுவது சாலைப் போக்குவரத்தின் போது ஓட்டுனருக்கு உதவும் வண்ணம் அமைக்கப்படிருக்கும் போக்குவரத்து அடையாளம் ஆகும். ஊர்களின் சாலைகளின் பெயர்கள், வெளியேற்றப் பாதைகள், சாலைகளுக்கிடையேயான தூரம் போன்ற தகவல்களையும் வழிகாட்டி அடையாளங்கள் காட்டும். இவை பொதுவாக நீள் செவ்வகம் வடிவில், பச்சைப் பின்புலத்தில், வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கும்.