வழுக்கு மரம் ஏறல்

வழுக்கு மரம் ஏறல் என்பது ஒருவர் உயரமான வழுவழுப்பான மரத்தில் ஏறி, அதன் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பரிசு முடிப்பை எடுக்கும் விளையாட்டு. நன்கு வளர்ந்த பாக்கு மரத்தின் மேல் பட்டையை உரித்து, அதில் கடுகு, ஆரியம், உளுந்து மாவு போன்ற பொருட்களைக் கலந்து மரத்தின் உச்சி வரை தடவுவர். தொடர்ச்சியாக வழுவழுப்பாக வைத்திருப்பர். மரத்தில் ஏறுவதற்கு ஆண்கள் அனைவரும் போட்டி போடுவர். இதில் ஏறும்போது தண்ணீரை அடிப்பர். இதனால் ஏற்கனவே உள்ள வழுவழுப்போடு தண்ணீரும் சேர்ந்து ஏறியவர் வழுக்கிக் கீழே வருவர். அதனையும் மீறி ஏறி மரத்தின் உச்சியில் உள்ள பொருளையோ பணமுடிப்பையோ எடுக்க வேண்டும். இது ஒரு தமிழர்களின் மரபு விளையாட்டு ஆகும்.

படிமங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழுக்கு_மரம்_ஏறல்&oldid=3877088" இலிருந்து மீள்விக்கப்பட்டது