வழுதலம்பட்டு

வழுதலம்பட்டு கிராமம், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் வழுதலம்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ளது[1]. இக்கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 200 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இங்கு காளியம்மன் கோவில் உள்ளது. காளியம்மனை வழுதலம்பட்டு, நடுகுப்பம், விளான்குப்பம் கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் மாதம் ஒரு முறை அமாவாசை அன்று வழிபாடு நடக்கும். வருடத்திற்கு ஒரு முறை பங்குனி மாதத்தில் மிகப் பெரிய திருவிழா நடக்கும். இதில் 2000 மக்களுக்கும் மேல் கலந்து கொள்வார்கள்.

இங்கு படித்தவர்கள் விழுக்காடு 40% மட்டும் தான். இங்குள்ள மக்களின் தொழில் வேளாண்மை மற்றும் கூலி வேலை மட்டுமே.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015., பக்கம் 231

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழுதலம்பட்டு&oldid=2760187" இலிருந்து மீள்விக்கப்பட்டது