வாக்களிக்கப்பட்ட நாடு

வாக்களிக்கப்பட்ட நாடு (எபிரேயம்: הארץ המובטחת‎) என்பது கடவுளால், எபிரேய விவிலியமான டனாக்கின்படி யாக்கோபின் சந்ததியினரான இசுரேலியர்களுக்குக் கொடுக்கப்பட்டது. வாக்குறுதி முதலில் ஆபிரகாமுக்கும் (ஆதியாகமம் 15:18-21), பின்பு அவருடைய மகன் ஈசாக்குடனும் அவருடைய மகன் யாக்கோபுடனும் புதுப்பிக்கப்பட்டது (ஆதியாகமம் 28:13)). வாக்களிக்கப்பட்ட நாடு எகிப்து நதியிலிருந்து புராத்து ஆறு வரை என விபரிக்கப்பட்டுள்ளது (யாத்திரையாகமம் 23:31).

ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்களித்ததின் அடிப்படையில் வரைபடத்தில் எல்லைகள் காட்டப்பட்டுள்ளன. (Genesis 15).

ஆபிரகாமின் சந்ததியினர் தொகு

யூதப் பாரம்பரியத்தின்படியும், பல கிறித்தவ விளக்கவுரையாளர்களின் விளக்கத்தின்படியும், ஆபிரகாமின் சந்ததியினர் எனப்படுபவர்கள் ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கு, அவருடைய பேரன் யாக்கோபு என்பவர்கள் ஊடானது மாத்திரமேயாகும். இது இஸ்மவேல், ஏசா என்பவர்களை உட்படுத்தவில்லை.[1][2][3][4][5][6][7][8][9][10]

உசாத்துணை தொகு