வாசித்தல் அல்லது படித்தல் என்பது எழுதப்பட்ட உரையின் எழுத்துக்களை பார்த்து, சொற்களைப் புரிந்து, அதில் கூறப்பட்ட கருத்தை உணர்ந்து கொள்வது எனலாம். வாசித்தல் எழுத்தறிவின் ஒரு அடிப்படைக் கூறு. இன்றைய அன்றாட வாழ்க்கைக்கு வாசித்தல் அவசியமானது.

வாசிப்பு வரையறை

தொகு

கையெழுத்தில் அல்லது அச்செழுத்தில் உள்ளதைக் கண்களால் கண்டு வாயால் உச்சரித்து சொல்லின் பொருள் உணர்வதே வாசிப்பு அல்லது படிப்பு என்பது டாக்டர் ந.சுப்புரெட்டியார் என்பவரின் கருத்தாகும். வாசிப்பின் செயல்பாட்டினைக் காணும் போது கண்ணுக்கும் வாய்க்கும் ஓர் ஒத்துழைப்புத் தேவைப்படுகிறது. அதாவது, வரிவடிவத்திலுள்ளச் சொற்களை ஒலி வடிவமாக மாற்றி உச்சரிக்கும் உறுப்புகளும், சொற்களை நோக்கும் கண்களும் ஒத்துழைத்தால்தான் வாசிப்பு சரிவர நடைபெறும். ஆகவே, வாசிப்பானது காணல், உச்சரித்தல், பொருளுணர்தல் என்ற மூவகை கூறுகள் அடங்கியுள்ளது.மேலும், நல்ல வாசிப்பிற்கு எழுத்துகளின் ஆளுமை முதற்கூறாக அமைந்தால் கருத்துணர்வு, எவ்விதப் பிரச்சனையுமின்றி சரளமாக அமையும் எனவும் ந.சுப்புரெட்டியார் கருதுகிறார்.

வாசிப்பின் அவசியமும் அதன் மேன்மையும்

தொகு

புத்தகம் வாசகனைப் பார்த்து கூறியது, "என்னை மேலிருந்து கீழாக படி உன்னை கீழிருந்து மேலாக உயர்த்துகிறேன்" என்ற கவிஞர் வாலியின் வார்த்தைககளோடு தொடர்ந்து பயணிக்கலாம்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசித்தல்&oldid=3389435" இலிருந்து மீள்விக்கப்பட்டது