வாத நாராயணன்
வாத நாராயணன் மரத்திற்கு ஆதி நாராயணன், வாதரக்காச்சி, வாதரங்கரச்சி, பெருங்கொன்றை என்ற பெயர்களும் உண்டு. இதன் ஆங்கிலப் பெயர் கிரமீன்பதும் டைகர் பீன் என்பதும் ஆகும். இதன் பழைய பெயர் பாயின்சியானா எலேட்டா ஆகும். இம்மரம் விரைவில் வளரும் தன்மை கொண்ட மர வகைகளுள் ஒன்றாகும். இது கலர் மற்றும் வரட்சியான பகுதிகளில் நன்கு வளரும் தன்மை கொண்டது. கருமண் மற்றும் செம்மண் நிலங்கள் இரண்டிற்கும் ஏற்றதொரு சிறந்த மரமாகும். இதன் விதை மூலம் இனப்பெருக்கம் செய்வதுண்டு. ஆனால் மழைக் காலங்களில் இதன் கிளைகளை வெட்டி ஊண்றி இனப்பெருக்கம் செய்வது சிறந்த முறை.
பித்த தேகம் உடையவர்களுக்கும் பேதி நோயாளிகளுக்கும் குடல் பலவீனமாகி அடிக்கடி மலம் கழிக்கும் நோயாளிகளுக்கும் நாட்பட்ட பேதி உடையவர்களும் இதனைப் பயன்படுத்தக் கூடாது. ஆதி நாராயணன் மரத்தின் பச்சை வேரை 35 கிராம் எடுத்து அரைத்து தயிரில் கலக்கி கொடுக்க வயிற்றைக் கடுத்து போகும், இரத்த சீத பேதி உடனே நிற்கும். மரப்பட்டை காய்ச்சலைக் குணமாக்கும். [1]
- ↑ அறிவியல் களஞ்சியம் - தொகுதி 18 - தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு எண் 344 - மே 2009 - பக்கம் 697. [[பகுப்பு: திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]