வானொலி உழவர் சங்க செய்திக் கதிர்
வானொலி உழவர் சங்க செய்திக் கதிர் என்பது வானொலி உழவர் சங்கத்தின் வேளாண்அறிவியல் தமிழ் திங்களிதழ். 2000 ஆம் ஆண்டு முதல் வெளிவரும் இவ்விதழின் ஆசிரியராகத் “துகிலி சுப்பிரமணியம்” இருந்து வருகிறார். இவர் முன்னாள் பண்ணை வானொலி அலுவலர். இந்த இதழில் உழவுத் தொழில் தொடர்பான நுட்பக் கருத்துக்களை விளக்கமாக பயனுள்ள வகையில் வெளியிடப்பட்டு வருகிறது.