வான்கோழி வளர்ப்பு
வான்கோழி வளர்ப்பு இலாபமீட்டக்கூடிய ஒரு குடிசைத்தொழிலாகவும் பெரும் பண்ணைமுறையிலும் வளர்க்கப்படுகிறது.
முட்டை அடைவைப்பு முறை
தொகுவான்கோழிகள் பெரும்பாலும் சுயமாக முட்டைகளை அடைகாப்பது இல்லை. அடைகாக்கும் இயந்திரத்தின் மூலம் அல்லது நாட்டுக் கோழிகளைக் கொண்டு அடைகாக்கப்படுகிறது. முட்டைகளை மழை, பனிக்காலத்தில் 7 நாள் வரையிலும், காற்று இளவேனிற் காலத்தில் 6 நாள் வரையிலும், வெயில் காலத்தில் 4 நாள் வரையிலும் சேமித்துவைத்துப் பின் அடை வைக்க பயன்படுத்த வேண்டும். நாட்டுக் கோழிகளில் 7 முட்டை வரையிலும் அடை வைக்கலாம். அடைகாக்கும் நாள் 28.
குஞ்சு பருவம் வளர்ப்பு முறை
தொகுவான்கோழி வளர்ப்பில் மிக முக்கியமான காலகட்டம் ஒரு மாதம் வரை வளர்ப்பதாகும். பொரித்த குஞ்சுகளை முடி உலர்ந்த பின் செயற்கை வெப்பமாக புரூடர் அமைத்து புரதம் நிறைந்த தீவன உணவு கொடுக்க வேண்டும். குளூகோஸ் கலந்த குடிநீரை வைக்க வேண்டும். வறுகடலை தூள் செய்து உணவாக கொடுக்கலாம். அவித்த முட்டையின் வெண்கரு மட்டும் எல்லாவகை தானியங்களுடன் கலந்து கொடுக்கலாம். இதற்கென்று பிரத்யேகமாக குஞ்சு தீவனங்கள் தயாரிப்பாளர்கள் உண்டு. வாங்கியும் பயன்படுத்தலாம். குஞ்சு பருவத்தில் குடிநீரினால் பெருமளவு உயிர் சேதாரம் ஏற்படும். தீவன மூலப் பொருள்களில் அப்ளோடாக்சின் என்ற கொடிய நச்சினால் வான்கோழி குஞ்சுகள் இறக்கும். 20 நாளைக்கு பின் பசுந்தீவனங்களைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். வான்கோழி குஞ்சு வளரும் பருவம்: இந்த காலகட்டத்தில் வான்கோழிகள் பசுமையான இலைகளை விரும்பி உண்ண ஆரம்பிக்கும். குதிரைமசால், வேலிமசால், முயல்மசால், காசினி கீரை, அகத்தி, கேரட், கல்யாணி முருங்கை, சித்தகத்தி, (சுபாபுல், கிளரிசிடியா இலைகளை வாடவிட்டு கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்) அருகம்புல், பொடுதலை, கோரை புற்கள், காராமணி, சவுண்டல், கடலைக்கொடிகள், மல்பெரி முருங்கை, கோ வைகை மாட்டு தீவன புல், கீரை வகைகள், காய்கறி, பழங்கள் என இயற்கையாக கிடைப்பவைகளை உணவாகக் கொடுக்கலாம். மழைக்காலங்களில் தேங்கிய மழைநீர் மண் படிந்த இலைகளைக் கொடுக்கக்கூடாது.
தோப்புகள் விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், மலர்த்தோட்டம், பழத்தோட்டம், தென்னந் தோப்புகள் இவைகளில் வான்கோழி வளர்க்கலாம். விவசாயத்தில் தீமை செய்யும் புழு, பூச்சி, கொசுக்களை உணவாக உட்கொண்டு பாதுகாக்கிறது. தென்னையில் உள்ள காண்டாமிருக வண்டு குப்பை கூளங்களில் முட்டை இட்டு புழுக்களை பெருக்கும் அந்த இளம்புழுக்களை வான்கோழி உணவாக உட்கொள்வதால் காண்டாமிருக வண்டு கட்டுப்படும். அரிசி, நெல்மணிகளை பெருமளவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குடிநீரினை நிழலான இடங்களில் வைக்க வேண்டும். வெயில் பட்டு குடிநீர் சூடாவதை தவிர்க்க வேண்டும்.
முட்டையிடும் பருவம்
தொகுவான்கோழிகள் 7-8 மாதங்களில் முட்டை இட ஆரம்பிக்கும். வான்கோழிக்கு எதிரிகள் நாய், நரி, கீரி, காட்டுபூனை, வீட்டுப்பூனை, வல்லூறு திருடர்கள், காக்கை, கழுகு இவைகளில் இருந்து தப்பிக்க ஒரு வளர்ந்த வான்கோழிக்கு 5 சதுர அடி இடம் என்ற வகையில் கொட்டகை அமைத்து வளர்க்கலாம்.