வான் மேன்

மலேசியாவில் உள்ள ஒரு தீவு

வான் மேன் (Wan Man) என்பது மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய தீவாகும். திராங்கானு ஆறு தென்சீனக் கடலைச் சந்திக்கும் கோலா திராங்கானு நகர எல்லைக்குள், அந்த மாநிலத்தின் பிரதான நிலப்பகுதியின் கிழக்குக் கடற்கரையில் இத்தீவு அமைந்துள்ளது.

வான் மேன்
Wan Man
உள்ளூர் பெயர்: புலாவ் வான் மேன்
ڤولاو من وان
வான் மேன் தீவின் பளிங்குக்கல் பள்ளிவாசல்
வான் மேன் Wan Man is located in மலேசியா
வான் மேன் Wan Man
வான் மேன்
Wan Man
புவியியல்
அமைவிடம்தென்சீனக் கடல்
ஆள்கூறுகள்5°19′0″N 103°7′0″E / 5.31667°N 103.11667°E / 5.31667; 103.11667
நிர்வாகம்
மலேசியா

புலாவ் வான் மேன் என்பது 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திறக்கப்பட்ட மலேசியாவின் இசுலாமிய பாரம்பரிய பூங்காவின் இல்லமாகும். இப்பூங்காவில் தீவின் வடகிழக்கு கரையில் பளிங்குக் கல் பள்ளிவாசல் உள்ளது. இந்தியாவின் தாச்மகால் மற்றும் செருசலேமின் பாறைக் குவிமாடம் போன்ற உலகெங்கிலும் உள்ள பல்வேறு அடையாளங்களின் பிரதிகள் இங்கு அளவிடப்பட்டன.[1]

இசுலாமிய பாரம்பரியப் பூங்கா கட்டப்படுவதற்கு முன்பு வான் மேன் தீவில் மனிதர்கள் இல்லை. ஆனால் தீவு ஊர்வனவற்றின் தாயகமாக இருந்தது, பனை காடுகள் மற்றும் அடர்ந்த அடிமரங்கள் இங்கு இருந்தன.[2] தீவின் அளவு 33 எக்டேர்களாகும்.(82 ஏக்கர்)[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Islamic Civilisation Park". Archived from the original on 2019-08-30. பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
  2. 2.0 2.1 "Knowledge park in the making at Pulau Wan Man", The Star (October 11, 2007).
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்_மேன்&oldid=3591835" இலிருந்து மீள்விக்கப்பட்டது