வான் லியூசென் வினை

நைட்ரைல் உருவாக்கும் வினை

வான் லியூசென் வினை (Van Leusen reaction) என்பது ஒரு கீட்டோன், தொலுயீன்சல்போனைல்மெத்தில் ஐசோசயனைடுடன் வினைபுரிந்து ஒரு நைட்ரைலை உருவாக்குகின்ற வினையாகும். 1977 ஆம் ஆண்டு இவ்வினையைக் குறித்து முதன்முதலில் வான் லியூசெனும் அவருடன் இணைந்து பணியாற்றிய சகதொழிலாளர்களும் விவரித்தனர் [1]. வான் லியூசென் வினையில் கீட்டோன்களுக்குப் பதிலாக ஆல்டிகைடுகளைப் பயன்படுத்தினால் குறிப்பாக ஆக்சசோல்களும் இமைடசோல்களும் கிடைக்கின்றன.

வான் லியூசென் வினை
பெயர் மூலம் தான் வான் லியூசென்
ஆல்பர்ட்டு எம். வான் லியூசென்
வினையின் வகை பதிலீட்டு வினை
இனங்காட்டிகள்
கரிமவேதியியல் வலைவாசல் லியூசென் வினை.shtm வான் லியூசென் வினை
வான் லியூசென் வினையின் வரைபடம்
வான் லியூசென் வினையின் வரைபடம்

வினைவழிமுறை தொகு

தொலுயீன்சல்போனைல் மெத்தில் ஐசோசயனைடின் புரோட்டான் நீக்கத்துடன் இவ்வினைவழி முறையின் தொடக்கம் அமைகிறது. இதனால் சல்போன் மற்றும் ஐசோசய்னைடு குழுக்கள் இரண்டும் எலக்ட்ரான் திரும்பப்பெறும் விளைவுக்கு உட்படுகின்றன. இதனைத் தொடர்ந்து கார்பனைல் குழுவின் மீதான தாக்குதல் பால்டுவின் விதிகளை பின்பற்றும் 5-அக-மூலைவிட்ட வளையமாதல் வினையால் நிகழ்ந்து 5 உறுப்பினர் வளையமாகிறது.

வான் லியூசென் ஆக்சசோல் தொகுப்பு வினை
பெயர் மூலம் தான் வான் லியூசென்
ஆல்பர்ட்டு எம். வான் லியூசென்
வினையின் வகை வளையம் உருவாகும் வினை
இனங்காட்டிகள்
கரிமவேதியியல் வலைவாசல் லியூசென் ஆக்சசோல் தொகுப்பு.shtm வான் லியூசென் ஆக்சசோல் தொகுப்பு

வினையின் தளப்பொருள் ஆல்டிகைடாக இருக்கும் நிகழ்வில் விடுபடும் குழு தொலுயீன்சல்போனைல் குழு உடனடியாக உருவாகி நீக்கமடைகிறது. ஆக்சசோல் மூலக்கூறு விளைபொருளாக உருவாகிறது.

வான் லியூசென் இமைடசோல் தொகுப்பு வினை
பெயர் மூலம் தான் வான் லியூசென்
ஆல்பர்ட்டு எம். வான் லியூசென்
வினையின் வகை வளையம் உருவாகும் வினை
இனங்காட்டிகள்
கரிமவேதியியல் வலைவாசல் லியூசென் இமைடசோல் தொகுப்பு.shtm வான் லியூசென் இமைடசோல் தொகுப்பு

ஒருவேளை ஆல்டிகைடு ஓர் அமீனுடன் ஒடுக்க வினைபுரிந்து உருவாகும் ஆல்டிமைன் தளப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டால் மேற்கண்ட அதேவினை நிகழ்ந்து இமைடசோல்கள் உருவாகின்றன [2]

 
Mechanism showing the synthesis of an oxazole through the Van Leusen reaction

தளப்பொருளாக கீட்டோன்கள் பயன்படுத்தப்பட்டால் நீக்கவினை நிகழ்வதில்லை. மாறாக, அமைப்பு மாற்றியனாகும் செயல்முறை நிகழ்ந்து ஓர் இடைநிலைப்பொருள் உருவாகிறது. இதனைத் தொடர்ந்து வளையத்திறப்பு செயல்முறையும் தொலியீன்சல்போனைல் நீக்கமும் நிகழ்ந்து என்-பார்மைலேற்ற ஆல்க்கீனிமைன் உருவாகிறது. பின்னர் ஒர் அமிலத்தன்மை ஆல்ககாலால் கரைப்பானாற்பகுப்புக்கு உட்படுத்தப்பட்டு நைட்ரைல் விளைபொருள் உருவாகிறது.

 
Mechanism for the Van Lausen reaction

.

மேற்கோள்கள் தொகு

  1. Van Leusen, Daan; Oldenziel, Otto; Van Leusen, Albert (1977). "Chemistry of sulfonylmethyl isocyanides. 13. A general one-step synthesis of nitriles from ketones using tosylmethyl isocyanide. Introduction of a one-carbon unit". J. Org. Chem. (American Chemical Society) 42 (19): 3114–3118. doi:10.1021/jo00439a002. 
  2. Gracias, Vijaya; Gasiecki, Alan; Djuric, Stevan (2005). "Synthesis of Fused Bicyclic Imidazoles by Sequential Van Leusen/Ring-Closing Metathesis Reactions". Org. Lett. (American Chemical Society) 7 (15): 3183–3186. doi:10.1021/ol050852+. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்_லியூசென்_வினை&oldid=2749915" இலிருந்து மீள்விக்கப்பட்டது