வாயிலான் தேவன்
வாயிலான் தேவன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 103, 108 ஆகிய இரண்டு பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கப்பாடல் தொகுப்பில் உள்ளன.
வாயில் என்பது ஊரின் பெயர். சென்னை மயிலாப்பூர் சிவபெருமானை வாயிலிலிருந்தே வழிபட்ட சிவனடியார் வாயிலார். இவர் வாந்த ஊர்ப்பகுதி வாயில். இந்தப் புலவர் இளங்கண்ணன் இந்த ஊரில் வாழ்ந்தவர் போலும்.
- பாடல் சொல்லும் செய்தி
குறுந்தொகை 103
தொகுநாரை
- முருக்கம் பூப் போன்று சிவந்த தூவி மயிர்களையும், வாயையும் கொண்டது. கடல் உண்டாக்கிய சேற்றில் அது தன் இரையைத் தேடும்.
நாரை இரைதேட முடியாமல் தூவானத் துவலைகள் தூவிக்கொண்டிருக்கின்றன. வாடைக்காற்று நாரையையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது.
இப்போது கூட அவர் வருவதாகத் தெரியவில்லை. இனி என்னால் வாழமுடியாது போல் இருக்கிறது. - தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
குறிந்தொகை 108
தொகுகுன்றத்தில் மழை விளையாடும் கார்காலம் வந்துவிட்டது.
கறவை மாடுகள் கன்றுகள் இருக்கும் இடத்துக்குத் திரும்பும் மாலைக்காலமும் வந்துவிட்டது.
வெண்ணிற முல்லைப் பூக்களும் பூக்கின்றன. (அவர் இங்கு இல்லை. அதனால் சூடிக்கொள்ள முடியவில்லை)
இனி என்னால் வாழமுடியாது போல் ஆகிவிட்டது. - தலைவி தோழியிடம் கூறும் செய்தி இது.