வாய்ப்பாட்டு

இசைக்கருவியில் நேரடியாக பாடலைப் பாடாமல், 'வாயால் பாடி' நடத்தப்படும் கருநாடக இசை நிகழ்ச்சியே வாய்ப்பாட்டு என்றழைக்கப்படும். அதாவது பாடகரை முதன்மையாகக்கொண்டு நடத்தப்படும் கருநாடக இசை நிகழ்ச்சிக்கு வாய்ப்பாட்டு எனப்பெயர். இந்த இசை நிகழ்ச்சியில், இசைக்கருவிகள் பக்க வாத்தியமாக உபயோகப்படுத்தப்படும். வாத்திய தனி இசையை வேறுபடுத்திக்காட்டும் விதமாக இச்சொல் பயன்பாட்டில் உள்ளது.

ஆங்கிலப் பயன்பாடு

தொகு

வாய்ப்பாட்டினை ஆங்கிலத்தில் சொல்லும்போது ' vocal ' என நடைமுறையில் அழைக்கிறார்கள். Vocal என்பது மனிதக்குரல் (human voice) என பொதுவாக அறியப்படுவதாகும். அதாவது பாடகர் தனது குரலை, இசையை உருவாக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார் என புரிந்துகொள்ளப்படுகிறது.

இதையும் காண்க

தொகு

பாடுதல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்ப்பாட்டு&oldid=1597518" இலிருந்து மீள்விக்கப்பட்டது