வாய்மொழித் தேர்வு
வாய்மொழித் தேர்வு அல்லது வாய்மொழிச் சோதனை (Oral exam அல்லது viva voce; இடய்ச்சு மொழி பேசும் நாடுகளில் Rigorosum) என்பது பல பள்ளிகளில் உள்ள ஒரு நடைமுறையாகும், இதில் ஒரு தேர்வாளர் மாணவர்களிடம் வாய்மொழி வடிவத்தில் கேள்விகளை எழுப்புகிறார். தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு, பாடத்தின் போதுமான அறிவை வெளிப்படுத்தும் வகையில், மாணவர் தேர்வாளரின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்.
மீள்பார்வை
தொகுஇளநிலைப் பட்டம் பயிலும் மாணவர்கள் தாங்கள் பட்டம் பெறும் பொருட்டு பல அறிவியல் திட்டங்களுக்கு வாய்மொழித் தேர்வு அல்லது வாய்மொழி மற்றும் எழுத்துத் தேர்வுகள் ஆகியவற்றின் மூலம் திட்டத்தை முடிக்க வேண்டும். வழக்கமாக, படிப்பிற்கான வழிகாட்டிகள் அல்லது பாடத்திட்டங்கள் கிடைக்கின்றன, இதனால் மாணவர்கள் தேர்வில் இருக்கக்கூடிய பயிற்சி கேள்விகள் மற்றும் தலைப்புகளை மதிப்பாய்வு செய்வதன் மூலம் தேர்வுக்குத் தயாராகலாம்.
விமானப் பயிற்சியாளர்களுக்கான FAA மற்றும் CAA நடைமுறைச் சோதனையின் ஒரு பகுதியாக பிரைவேட் பைலட் எனும் வாய்மொழித் தேர்வும் தேவைப்படுகிறது.[1] வணிகக் கடற்படை மற்றும் எந்திர அதிகாரிகளுக்கான திறன் சான்றிதழை வழங்குவதற்காக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள கடல்சார் மற்றும் கடலோர காவல் முகமையால் வாய்மொழித் தேர்வும் நடத்தப்படுகிறது.[2]
ஏபிஆர்எஸ்எம், டிரினிட்டி இசைக் கல்லூரி மற்றும் இலண்டன் இசைக் கல்லூரி ஆகியவற்றால் நடத்தப்படும் இசைப் பட்டயச் சான்றிதழ் தேர்வுகளின் ஒரு அங்கமாக வாய்மொழித் தேர்வு உள்ளது.