வார்டன்பெர்க் சக்கரம்

'வார்டன் பெர்க் சக்கரம்' (Wartenberg wheel) என்பது  வார்டன் பெர்க் ஊசிச் சக்கரம் அல்லது வார்டன் பெர்க் நரம்புச்சக்கரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது நரம்பு மருத்துவப் பயன்பாட்டிற்கான கருவி ஆகும். ராபர்ட் வார்டன் பெர்க் (Robert Wartenberg), (1887-1956) சருமத்திலுள்ள நரம்புகளின் உணர்திறனை அறிய இச்சக்கரத்தை வடிவமைத்தார். இது தோல் மீது படிப்படியாக உருட்டப்படும் போது நரம்புகளின் உணர்திறனை அறிய முடிகிறது.[1]

வார்டன்பெர்க் சக்கரம்

பயன்பாடு

தொகு

பொதுவாக, வார்டன் பெர்க்  சக்கரம் துருப்பிடிக்காத எஃகினாலான 7 அங்குல (18 செமீ) நீளக் கைப்பிடியுடன் தயாரிக்கப்படுகிறது. சக்கரத்தைச் சதையின் மீது சுழற்றியவுடன் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள கூர்மையான ஊசிகள், தோல் மீது படிப்படியாகப் பரவுகின்றன. ஒற்றைப்பயன் நெகிழி (Disposable) வார்டன் பெர்க் சக்கரமும் கிடைக்கிறது. ஆரோக்கிய காரணங்களுக்காக இந்தச் சாதனங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதில்லை.[2]

பிற துறைகளில் பயன்பாடு

தொகு

வார்டன் பெர்க் சக்கரம் போன்ற ஒரு அமைப்பு, காகிதத்திலிருந்து துணிகளுக்கு, உருவங்களைப் பதியச் செய்யப் பயன்படுகிறது. இவ் வகை சக்கரங்களில் மரத்தாலான கைப்பிடி இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Lehrner J., e.a.: Klinische Neuropsychologie: Grundlagen - Diagnostik - Rehabilitation, Springer, 2005, S. 135, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-211-21336-8, here online
  2. Kornhuber E., e.a.: Die neurologische Untersuchung, Birkhäuser, 2005, p. 16, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-7985-1444-5, here online

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்டன்பெர்க்_சக்கரம்&oldid=2749032" இலிருந்து மீள்விக்கப்பட்டது