வார்ப்புரு:மீண்டும் வருக
மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களைக் காண மகிழ்ச்சி!
வணக்கம், மீண்டும் வருக!
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ee/Thoranam.jpg/150px-Thoranam.jpg)
மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களைக் காண்பதில் மகிழ்கிறேன்.
நீங்கள் என்னைப் போன்றவர் என்றால், பங்களிக்க இயலாத காலத்திலும் அண்மைய மாற்றங்களைக் கவனித்தவாறே இருந்திருப்பீர்கள். எனினும், இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகளை அறிய நமது ஆண்டு அறிக்கைகளைப் பாருங்கள். குறிப்பாக, மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரையும் உள்ளடக்கி வளர்ந்து வரும் தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தைக் காணுங்கள்.
பலரும் இணைந்து பங்களிக்கும் போது, அவ்வப்போதாவது வந்து செல்லும் போது, ஏற்கனவே இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியாகவும் உந்துதலாகவும் இருக்கும். உங்களைப் போன்றோரிடம் இருந்து புதுப்பயனர்களும் நிறைய கற்றுக் கொள்ள இயலும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய கட்டுரைகளை விரிவாக எழுதலாம். மேலும் பல கட்டுரைகளைத் தொடங்கலாம்.
- விக்கிப்பீடியா துப்புரவில் உதவலாம்.
- ஆசியமாதத்தில் பங்குபெறலாம்.
இதற்கு மேல் உங்களுக்குத் தெரியாதா என்ன :) ? உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். அன்புடன்...