வார்ப்புரு பேச்சு:கொலை செய்யப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

கொல்லப்பட்ட இலங்கை ஊடகவியலாளர் என்பது இன்னும் பொருத்தமான தலைப்பு. "கள்" என்று மேலும் பன்மைப்பின்னொட்டும் சேர்க்கலாம். "கொலை செய்தார்" என்னும் சில "தமிழ் ஊடக" மொழி வழக்கு சுற்றி வளைப்பு. கொன்றார் என்றாலே போதும். செயப்பாட்டு வினையாக கொல்லப்பட்டார் என்று சொல்லலாம். கொல்-கொன்றார்; செல்-சென்றார்; வெல்-வென்றார். பெரிய சிக்கல் இல்லை ஆனால் ஏனோ கொன்றார் என்பதைவிடக் "கொலை செய்தார்" என்றே தமிழ் ஊடகங்கள் எழுதித் தமிழ்ச்சொல் "கொல்"என்பதன் வினைவடிவத்தைக் கொல்கிறார்கள். மறுப்பு இல்லை எனில் கொல்லப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்கள் எனத் தலைப்பை மாற்றிவிடுகிறேன். வழிமாற்றும் இருக்கும். --செல்வா 15:22, 30 சனவரி 2012 (UTC)Reply

Return to "கொலை செய்யப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்" page.