வார்ப்புரு பேச்சு:பல்லவ வரலாறு
மூன்றாம் நந்தியும் நிருபனும்
தொகுகுடிமல்லம் பரசுராமேசுவரர் கோவில் கல்வெட்டு மூன்றாம் நந்தியின் 23ஆம் ஆட்சியாண்டு மற்றும் இறுதியாண்டு கல்வெட்டுமாகும். அதனால் இவன் காலம் 25 ஆண்டுகட்கு மேற்ச்செல்ல வாய்பில்லை. அதாவது 825 - 850. மேலும் பல்லவர் இராட்டிரகூடர் போரின் போது இராட்டிரரை தோற்கடித்து அவர்களின் மக்ளான சங்காவை மூன்றாம் நந்தி மனந்தான். அவர்களின் மகனே நிருபதுங்கவர்மன். இந்த நிருபனின் 18ஆம் ஆண்டுக்கல்வெட்டு ஒன்று திருவதிகையில் உள்ளது. பல்லவ்ர் இரட்டர் போர் 830க்கு முன்பே நடந்தது. அதனால் அதில் பிறந்தவன் நிருபதுங்கன் என்பதால் அவன் இடையில் ஆட்சி புரிந்திருப்பான்.
பெரும்பாலும் ஆங்கிலக்கட்டுரைகள் 19ஆம் நூறாண்டு இறுதி மற்றும் 20ஆம் நூறாண்டு ஆரம்பத்தில் எழுதப்பட்ட நூல்கள் கொண்டு வரைந்தவை. அதன்பின் தமிழாசிரியர்கள் செய்த மேலாய்வு நூல்களில் உள்ள காலத்தை எடுப்பதே சிறந்தது. அதில் இராசமாணிக்கனார் எழுதிய பல்லவ வரலாறு என்பதே கல்வெட்டுகள் கொண்டு ஆராய்ந்து எழுதிய நூலாகும். அதிலிருந்தே இக்குறிப்புகள் மாற்றப்பட்டுள.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:44, 24 சூன் 2012 (UTC)