வார்விக்கைட்டு

போரேட்டு கனிமம்

வார்விக்கைட்டு (Warwickite) என்பது (MgFe)3Ti(O, BO3)2 அல்லது Mg(Ti,Fe3+, Al)(BO3)O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுகளால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இரும்பு மக்னீசிய தைட்டானிய போரேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. கருப்பு நிறம் மற்றும் பழுப்பு நிறத்தில் பட்டகத்தன்மையுள்ள பளபளப்புடன் ஒளிபுகும் நேர்சாய்சதுரப் படிகங்களாக வார்விக்கைட்டு தோன்றுகிறது. இக்கனிமத்தின் ஒப்படர்த்தி 3.36 என்றும் மோவின் அளவுகோல் கடினத்தன்மை அளவு 3 முதல் 4 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது [2][3].

வார்விக்கைட்டு
Warwickite
வார்விக்கைட் மாதிரி
பொதுவானாவை
வகைபோரேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(Mg,Fe2+)3Ti[O|BO3]2
இனங்காணல்
நிறம்அடர் கருப்பு, சாம்பல் முதல் கருப்பு
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
பிளப்புசமபிளவு {100}
முறிவுஒழுங்கற்றது/சமமற்றது
மோவின் அளவுகோல் வலிமை3-4
மிளிர்வுமுத்துப் போன்ற பளபளப்பு, உலோகத்தன்மை, மந்தம்
கீற்றுவண்ணம்நீலம் கலந்த கருப்பு
ஒப்படர்த்தி3.34 - 3.36
மேற்கோள்கள்[1]

தோற்றம்

தொகு

பாறை வேதி உருமாற்றத்தால் தோன்றிய சிலிக்காவுடன் சேர்ந்த சுண்ணாம்புக்கல் பாறைகள், லேம்பிரைட்டு எனப்படும் மீத்தூய பொட்டாசிய தீப்பாறை வகை மூடகப் பகுதிகள், கார்பனாடைட்டு வகை தீப்பாறை கொடிப்பகுதிகள் போன்றவற்றில் வார்விக்கைட்டு காணப்படுகிறது. முதன் முதலில் நியூயார்க்கின் ஆரஞ்சு மாகாணத்திலுள்ள வார்விக்கைட்டு நகருக்கு அருகில் 1838 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதேபோல கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இருக்கும் பேன்கிராப்ட்டு நகரம், எசுப்பானியாவின் மூர்சியா மாகாணம், சைபீரியா, வட கொரியாவின் பியொங்யாங் நகரம் முதலான பகுதிகளிலும் வார்விக்கைட்டு கிடைக்கிறது [4].

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்விக்கைட்டு&oldid=2770560" இலிருந்து மீள்விக்கப்பட்டது