வார் ஆப் த பட்டன்ஸ் (புதினம்)

வார் ஆப் த பட்டன்ஸ், எ நாவல் ஆப் மை டுவல்த் இயர் (முழு பெயர்) என்பது பிரஞ்சின், ஃப்ரான்ச் காம்டேவில் இருந்து லூயிஸ் பெர்கார்ட் எழுதிய ஒரு பிரஞ்சு புதினமாகும். இது 1912 இல் வெளியிடப்பட்டது. இது ஃப்ரான்ச் காம்டே பகுதியில் இருந்த இரு போட்டி மிகுந்த கிராமங்களான லாங்கர்வெர்னே மற்றும் வெல்ரேன்ஸை ஆகியவற்றைச் சேர்ந்த இரண்டு கும்பல்களுக்கு இடையில் நடைபெறும் "போர்" பற்றி விவரிக்கிறது. நாவலாசிரியர் தான் இரண்டு ஆண்டுகள் கல்வி பயின்ற கிராமமான லாண்டிரேஸை கதைக்களமாக பயன்படுத்தியுள்ளார். புதினத்தின் பெயரானது போரின் முக்கிய இலக்கான எதிரணியில் இருந்து அவர்களின் சட்டை மற்றும் கால்சட்டையிலிருந்து துண்டித்து கூடிய வரை அதிகமான பொத்தான்களை பெற வேண்டும் என்பதில் இருந்து உருவானது. கதையின் பெரும்பாலான பகுதி லாங்கர்வர்னே குழந்தைகளின் பார்வையில் இருந்து சொல்லப்படுகிறது.

1912 ஆண்டு பதிப்பின் தலைப்பு பக்கம்

கதைச் சுருக்கம் தொகு

லாங்கர்வர்னேயின் சிறுவன் லெப்ராக் தலைமையில் ஒரு படையும் வெல்ரேன்ஸை சேர்ந்த அஸ்டெக் டி கய்ஸ் தலைமையில் மற்றொரு படையுமாக இவர்களில் எவரும் கருணையின்றி ஒருவருக்கு ஒருவர் குச்சிகள், கற்கள் மற்றும் வெறும் கையால் சண்டையிட்டுக்கொள்கின்றனர்.

எதிர்பாராதவிதமாக எதிரிகளிடம் சிக்கும் அனைவரின் பொத்தன்களும், காலணி கட்டு கயிறுகளும் வெட்டப்பட்டு[1] அவமானத்துடன் வீட்டிற்கு துரத்தப்படுவதுடன் இதனால் வீட்டில் பெற்றோரிடம் அடியும் வாங்கவேண்டிய நிலை ஏற்படும்.

லெப்ராக் சண்டையில் வெல்ல வேண்டும் என்ற ஆசைக்காக முறையற்ற போர்முறையைக் கையாண்டான். அதாவது தங்கள் படையின் துணிகளுக்கு சேதம் நேராமல் தடுக்க நிர்வாணமாகவும் அதையும் மீறி சேதம் நேருமானால் உடனடியாக அவற்றை தைக்க சிறுமிகளை வைத்திருந்தான்.

மேற்கோள்கள் தொகு

  1. "The War of the Buttons (2011 film adaptation)". 26 September 2011. பார்க்கப்பட்ட நாள் 2022-12-13.