வாலரீ பாட்ரீசியா மயர்சுகாப்
வாலரீ பாட்ரீசியா மயர்சுகாப் (Valerie Patricia Myerscough) (20 ஜூன் 1942 – 8 நவம்பர் 1980) ஒரு கணிதவியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் தன் மதிப்பார்ந்த பெருங்கொடைகளை விரிவாக வானியற்பியலுக்கு அளித்துள்ளார். இவர் அரசு வானியல் கழகப் படிமலர்ச்சிக்கும் தன் குறுகிய வாழ்நாளில் பெரும்பணி ஆற்றியுள்ளார்.
வாழ்க்கை
தொகுஇவர் இங்கிலாந்து வடக்குப் பகுதியில் 1942 ஜூன் 20 அன்று பிறந்தார்.இவர் தன் 16 ஆம் அகவையில் அரசு ஆல்லோவே கல்லூரியில் கணிதவியல் இளவல் பட்டம் படிக்க விண்ணப்பித்து அக்கல்லூரியில் சேர்ந்துள்ளார். இவர் தன் 19 ஆம் அகவையில் கல்லூரியில் முதல் மதிப்புடன் தேறி, இலண்டன் பகலைக்கழக உலுபாக் பரிசையும் செர்புரூக் பரிசையும் ஈட்டியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இவர் தன் முனைவர் பட்டத்தை எம்.ஆர்.சி. மெக்டோவல் வழிகாட்டுதைல் " எதிர்கரிம மின்னணுவின் தொடர்ந்த உட்கவர்தலும் பிற குவையக் கணக்கீடுகளும்" எனும் தலைப்பில் பெற்றுள்ளார்.[1]
இவர் முதலில் தர்காம் பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் ஆய்வை மேற்கொண்டுள்ளார். பின்னர் 1965 முதல் 1967 வரை மில்லர் ஆய்வுறுப்பினராக இரண்டாண்டுகள் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக வானியல் துறையில் ஆய்வுறுப்பினராக இருந்துள்ளார். இங்கு இவர் மிக நிறைவாக அனைவரையும் கவரும் வகையில் பணீயாற்றியதால் பின்னர் பல வருகைதரு பதவி இருப்பிடங்களுக்கு வழி வகுத்துள்ளது. அங்கு இவர் மசாசூசட் பல்கலைக்கழக இணைபேராசிரியகாகவும் கொலராடோ, பவுல்டரில் உள்ள உயர் குத்துயர நோக்கீட்டக ஆராய்ச்சி அற்வியலாளராகவும் கல்லூரிப் பூங்கா, மேரிலாந்து பல்கலைக்கழகப் ப்ராசிரியராகவும் ஆசுட்டீனில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் வருகை தந்துள்ளார். இந்தப் பதவிகளில் இவர் 1967 இல் பணியமர்ந்த அரசி மேரி கல்லூரி கணிதவியல் துறையில் முழுநேர விரிவுரையாளராக பணி செய்தபடியே வகித்துள்ளார். இங்கு இவர் கோட்பாட்டு இயற்பியலிலும் கணிதவியலிலும் பலவகைப் பாடங்களை எடுத்த்தோடு ஆய்வுத் திட்டங்களிலும் பங்கேற்று முனைவர் பட்டத் தலைப்பில் தன் ஆய்வைத் தொடர்ந்துள்ளார்.[1]
இவர் 1963 இல் அரசு வானியல் கழகத்தில் சேர்ந்து முனைப்பாக செயல்பட்டு வந்தார்; இவருக்கு அக்கழகம் 1967 இல் ஆய்வுறுப்பினர் தகுதியை அளித்தது. பிரகு இவர் தகவுறு தணிக்கையாளர், மன்ற உறுப்பினர், துணைத்தலைவர், செயலாளர், உள்ளக்க் குழுக்களின் உறுப்பினர், 1976 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருங்கிணைப்பாளர் எனப் பல பதவிகளில் தொடர்ந்தார். குறிப்பாக, இவர்பர்லிங்டன் அவுசில் உள்ள எர்ழ்செல் நினைவறையை மீட்டுருவாக்குவதை மேற்பார்வையிட்டார்.[1]
வாழ்நாள் முழுவதும் இவர் பல அறிவி யல் கழகங்களிலும் அமைப்புகளிலும் தன்னை இணைத்துக் கொண்டு அவற்றில் முனைப்பாக இயங்கியுள்ளார்; இவரது நினைவேந்தலில் இவர் கட்டற்ற கவலையற்ற தாந்தோன்றிப் பெண்மணிய்யாக நினைவுகூரப்படுகிறார். இவர் பெர்க்கேலியில் வளைதடிப் பந்து, பூப்பந்து விளையாட்டுக் குழுக்களில் பங்கேற்றுள்ளார்; பெர்க்கேலி அமெரிக்க கல்லூரி வாழ்க்கைப் பட்டறிவும் இணக்கமும் தான் இவருக்கு பல வருகைதரு பதவிகளை ஈட்டித் தந்துள்ளது. இவர் அரசி மேரிக் கல்லூரியில் தன் பாடங்களை நகைச்சுவை ததும்ப ஆழமாக விளக்குவார். இவர் மாணவர் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளும் புல உறுப்பினராகச் செயல்படுகிறார். இவர் அரசு வானியல் கழகத்தில் பிரித்தானிய மாந்தநேய முகமாக போற்றப்படுகிறார். இந்த அரும்பணிகள் மட்டுமல்லாமல், இவர் இலண்டன் பில்கார்மோனிக்கா இசைக்குழுவிலும் முனைப்போடு செயல்படுகிறார்.[1]
இவர் 1980 இல் நோயுற்றதால் இவரது வாணாள் குன்றியது. இவர் 1980 நவம்பர் 8 அன்று இறந்துவிட்டார்.[1][2]
தகைமைகள்
தொகுஅரசி மேரிக் கல்லூரியிலும் அரசு ஆல்லோவே கல்லூரியிலும் வாலரீ மயர்சுகாப் நல்கை எனும் வைப்புநிதி இவரது நினவாக உருவாக்கி வானியல், கணிதவியல், இயற்பியல் மாணவருக்கு நல்கையாக வழங்கப்படுகிறது. [3] இலண்டன் பல்கலைகழகத்தில் வானியல், கணிதவியல், இயற்பியல் துறைகளில்தன்னிகரற்ற திறமை பெற்றுள்ள இளம் பட்ட மேற்படிப்பு மாணவருக்கு நல்கும்பயணப்படி வழங்கும் பரிசு வாலரீமயர்ச்காப் ப்ரிசு என இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[4] இங்கிலாந்து வங்கி தன் 50 பவுண்டு நாணயத் தாளில் 2019 இல் அச்சிட தேர்ந்தெடுத்த 1000 பேரில் இருந்து உருவாகிய சிறுபட்டியலில் இவரது பெயர் அடங்கியது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 McCrea, W. H.; McDowell, M. R. C. (1981). "Obituary - Myerscough, Valerie-Patricia". Quarterly Journal of the Royal Astronomical Society 22: 85.
- ↑ "Valerie Patricia Myerscough". Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 24 February 2019.
- ↑ "Valerie Myerscough Studentships". European Funding Guide. பார்க்கப்பட்ட நாள் 24 February 2019.
- ↑ "Valerie Myerscough Prize 1996". IC Reporter. பார்க்கப்பட்ட நாள் 24 February 2019.
- ↑ "£50 character selection" (PDF). Bank of England. பார்க்கப்பட்ட நாள் 24 February 2019.