வாலியா மன்னதால் ஹம்சா
வாலியா மன்னதால் ஹம்சா (Valiya Mannathal Hamza) என்பவர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அறிவியலாளர் ஆவார்.[1] அமேசான் ஆற்றுக்கு அடியில் 6000 கிலோமீட்டர் தொலைவு நீளமாகவும் 4000 மீட்டர் ஆழத்திலும், ஹம்சா ஆறு என்ற ஒர் ஆறு ஓடுவதை இவரும் எலிசபெத் தவரஸ் பிமெண்டல் என்பவரும் கண்டுபிடித்தார்கள்.
வாலியா மன்னதால் ஹம்சா 1960 களில் கேரள மாநிலத்தில் படித்துப் பட்டம் பெற்றார். 1966 இல் ஐதராபாத்தில் புவியியல் ஆய்வு நிறுவனம் ஒன்றில் அறிவியல் உதவியாளர் பணியில் சேர்ந்தார். கனடாவில் உள்ள மேற்கு ஒண்டாரியோ பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற்று பின்னர் 1974 இல் பிரேசில் சென்றார்.
மேற்கோள்
தொகு- ↑ "Amazon has a twin river that flows 4.000 metres below the ground". Mercopress. 2011. பார்க்கப்பட்ட நாள் 2 September 2011.