வால்டேர் குடாக்கர்
வால்டேர் குடாக்கர் (Walter Goodacre) (1856 – 1 மே 1938) ஒரு பிரித்தானிய வணிகரும் பயில்நிலை வானியலாளரும் ஆவார். இவர் நிலாவரைவியலில் ஆழ்ந்த கவனத்தைச் செலுத்தினார்.[1][2]
இவர் பிரித்தானிய வானியல் கழகத்தின் நிலாப்பிரிவில் இரண்டாவது இய்க்குநராக 1897 இலிருந்து 1937 வரை இருந்தார். இவர் அக்கழகத்தின் தலைவராக 1922 இலிருந்து 1924 வரை விளங்கினர் 1910 இல் 77" விட்ட நிலாப்படத்தை வரைந்தார். இவர் 1931 இல் நிலாவின் தரைப்படங்கள் அவற்றின் கூறுபாடுகளுடன் அமைந்த பெரிய நூலொன்றை வெளியிட்டார்.[2]
ஒரு வணிகராக, இவர் தன் குடும்பத் தொழிலான கம்பள விரிப்புத் தொழிலை இந்தியாவிலும் விரிவுபடுத்தித் தான் ஓய்வு பெறும்வரை நடத்தி வந்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Steavenson, William Herbert (1939). "Walter Goodacre". Monthly Notices of the Royal Astronomical Society (London, England: Royal Astronomical Society) 99 (4): 310–311. doi:10.1093/mnras/99.4.310a. Bibcode: 1939MNRAS..99R.310..
- ↑ 2.0 2.1 "Obituary: Walter Goodacre". Journal of the British Astronomical Association (London, England: British Astronomical Association) 49 (1): 38–40. 1938. Bibcode: 1938JBAA...49...38.. http://articles.adsabs.harvard.edu//full/seri/JBAA./0049//0000038.000.html.
- ↑ Dobbins, Thomas A. (2009). "Goodacre, Walter". In Hockey, Thomas; Trimble, Virginia; Williams, Thomas R.; Bracher, Katherine; Jarrell, Richard A.; Marche, Jordan D.; Ragep, F. Jamil; Palmeri, JoAnn; Bolt, Marvin (eds.). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் 22 August 2012.