வால்மீகர் ஞானம்
சித்தர்களில் ஒருவரான வால்மீகர் [1] [2] என்பவர் பாடிய நூல் வால்மீகர் ஞானம் [3] என்றும், வால்மீகர் சூத்திர ஞானம் [4] என்றும் குறிப்பிடப்படுகிறது. நூலின் காலம் 16 ஆம் நூற்றாண்டு. இதில் 16 விருத்தப் பாடல்கள்
வந்ததுவும் போனதுவும் வாசி ஆகும்
- வானில் வரும் ரவி மதிழும் வாசி ஆகும்
சிந்தை தெளிந்து இருப்பவனாம் அவனே சித்தன்
- செகமெல்லாம் சிவம் என்றே அறிந்தோன் சித்தன்
நந்தி என்ற வாகனமே தூல தேகம்
- நான்முகனே கண் மூக்கு செவி நாக்கு ஆகும்
தந்திமுகன் சிவசக்தி திருமூச்சு ஆகும்
- தந்தை தாய் ரவி மதி என்று அறிந்து கொள்ளே. [6]
இப்பாடலில் சொல்லப்பட்ட செய்தி
தொகுஉடல் | தெய்வம் |
---|---|
வாசி [7] | வருவது, போவது வானில் வந்து போகும் சூரியனும் சந்திரனும் |
சித்தன் | சிந்தை தெளிந்திருப்பவன் உலகமும் அண்டவெளியும் ஆகிய செகம் அனைத்தும் சிவம் |
நம் உடல் | சிவத்தைச் சிமக்கும் நந்தி என்னும் வாகனம் |
கண், மூக்கு, செவி, நாக்கு | நான்முகன் |
திருமூச்சு [8] | ஆனைமுகன் சிவசத்தி |
நம் தந்தை தாய் | சூரியனும் சந்திரனும் |
வான்மீகர் கூறும் ஞானக் கருத்துக்களில் சில
தொகு- சிவம் இருள்வெளி. அது அருவம். சூரியனும் சந்திரனும் திருமால் [9] அவன் முகம் சிவசத்தி. [10]
- சரியை என்பது பூரகம் [11]. கிரியை என்பது கும்பகம் [12] யோகம் என்பது பிரிந்து வெளியேறும் மூச்சு. இதனால் உடலுக்குள் புகுகின்ற பிராணவாயு சிவசத்தி அடங்கும் வீடு. இவற்றை உணர்ந்தவன் சித்தன். [13]
- கல் செம்பைப் பூசிப்பவர்களும், காய் கனி தின்று காட்டில் திரிவோரும் பித்தர். [14]
- குரு, சீடன் என வேடம் அணிந்து திரிபவர் கசடர். [15]
- புலித்தோல், கசாயம் அணிந்துகொண்டு யோகி, ஞானி என்று காட்டில் அலைய வேண்டா. [16]
- வேதம் 4, சாத்திரம் 6, புராணம் 18 என அவரவர் பிழைப்புக்காகப் படைத்துக்கொண்டனர். [17]
- பாடை வேணும் [18] [19]
- பாடையில் சிவம் இல்லை. வாசியில் [20] சிவன், நான்முகன், திருமால் உள்ளனர். [21]
- சிவசிவா பாடல் 18-க்குத் திறவுகோல் வான்மீகன் பதினாறு [22]
- மௌனமாக மூச்சோட்டத்தில் மனம் வைத்து, பின் அதனையும் மறந்து தாயாரை நினை. [23]
- சிவசத்தி என்பது திருமூச்சு. இந்தச் சூக்குமத்தை மூடருக்குக் காட்டாதே. [24]
- உன் விழியை நீயே காண்பது போல் ஆனந்தக் கூத்தைக் காண். [25]
- நித்திய கருமங்களைச் செய்பவர்களுக்குச் சித்தி கிட்டும். [26]
- உடலுக்குப் பதி மூலி [27] [28]
அடிக்குறிப்பு
தொகு- ↑ வால்மீகி முனிவரின் பெயரை இட்டுக்கொண்டவர்
- ↑ [ல்] எழுத்தை அடுத்து [ம] எழுத்து வருவதால் தமிழ் நெறிப்படி இப் பெயரை 'வான்மீகர்' எனவும் எழுதுவர்
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 216.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ அரு. இராமநாதன், பதிப்பாசிரியர் (முதல் பதிப்பு 1957, ஆறாம் பதிப்பு 1957). சித்தர் பாடல்கள் முதல் பாகம், இரண்டாம் பாகம். சேன்னை 14: பிரேமா பிரசுரம்,. p. 316.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: location (link) - ↑ பொருள் நோக்கில் சொற்கிரிப்பு செய்யப்பட்டது
- ↑ பாடல் 2
- ↑ வசிப்பதாகிய வாழ்வு வாசி எனப்பட்டது
- ↑ நமக்குள்ளே ஓடும் மூச்சு
- ↑ கையிலுள்ள சங்கு சக்கரம்
- ↑ பாடல் 1
- ↑ உள்ளுக்குள் ஓடும் மூச்சு
- ↑ மூச்சை அடக்குதல்
- ↑ பாடல் 3
- ↑ பாடல் 4
- ↑ பாடல் 5
- ↑ பாடல் 6
- ↑ பாடல் 8
- ↑ மொழி வேண்டும்
- ↑ பாடல் 9
- ↑ மூச்சில்
- ↑ பாடல் 10
- ↑ பாடல் 11
- ↑ பாடல் 12
- ↑ பாடல் 13
- ↑ பாடல் 14
- ↑ பாடல் 15
- ↑ துரியம்
- ↑ அறிவியல் நோக்கில் மூளை