வாழவச்சனூர்

வாழவச்சனூர் என்பது தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம், தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு கிராமம். இக்கிராமம் 1972-இல் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு உருவானது. இந்நாளில் மாட்டு சந்தையும் கால்நடைச் சந்தையும் இங்குள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களால் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. இங்கே வேளாண்மை முக்கியமான தொழிலாகும். இதனால் கால்நடைகளான ஆடு மாடுகளின் தேவையும் அதிகம். நிலங்களைப் பண்படுத்தும் உழவுத்தொழிலுக்கான ஏர் மாடுகளுக்கான சந்தை என்பதால் அக்கம் பக்கம் உள்ள ஊர்களுக்கான தேவையும் அதிகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழவச்சனூர்&oldid=3588919" இலிருந்து மீள்விக்கப்பட்டது