வாழ்வளிக்கும் மரம்
வாழ்வளிக்கும் மரம் (The Tree of Life) என்பது மனித வாழ்க்கை அறிவியல், சமயம், தத்துவம், மற்றும் புராணங்களின் கருத்துப்படி ஒரு மரத்தின் பரிணாம வளர்ச்சியோடு ஒப்பிடப்படுகிறது. பூமியில் வாழும் மனிதனின் தோற்றம் இதுவரை புரியாத எந்த ஆராய்ச்சி மூலமும் கண்டுபுடிக்க முடியாத ஒரு புதிராகவே இருந்துவருகிறது. மறைமுகமாக உள்ள உள்ளிணைப்பு கொண்ட நமது உடலின் பரிணாம உணர்வு பொதுவான வம்சாவளியை கொண்ட உருவகமாக உள்ளது.[1][2]
மதம் மற்றும் தொன்மவியல்
தொகுகிராமிய கலாச்சாரம் மற்றும் அறிவியல் நினைவுகளில் மரங்கள் பெரும்பாலும் கருவுருதலின் மூலம் அழியா வரம்பெற்ற விருட்சமாக இருப்பதை நாம் காண முடிகிறது. இவற்றில் பல மரங்கள் மதங்களின் பெயரால் புகழின் உச்சத்தில் இடம்பிடித்துள்ளது.
இஸ்லாமியத்திற்கு முந்தைய பாரசீக புராணங்களில் மரங்களை பெரியதாகவும், புனிதமாகவும் கருதினர். புராணங்களில் ஆரிமன் (Ahreman) பூமியில் வளரும் அனைத்து மரங்களையும் தடுத்து அழிக்க ஒரு தவளையை உருவாக்கினார். இதன் விளைவாக, கடவுள் (Ahura மஸ்டா) மரங்களை பாதுகாக்க இரண்டு மீன்களை உருவாக்கினார். அந்த இரண்டு மீன்கள் எப்போதும் தவளையை பார்த்துக்கொண்டு அதன் செயல்பாடுகளை கவனித்துக்கொண்டும் தயாராக இருக்க வேண்டும். மஸ்டா வாழ்க்கையில் எப்போதும் நல்லது செய்யவும், ஆரிமன் அனைத்து தீயவிணைகளை கொண்டவராகவும் வாழ்வளிக்கும் மரம் கருதுகிறது.