வாழ்வியல் மற்றும் மருத்துவக் கல்லூரி, அபெர்டீன் பல்கலைக்கழகம்

ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி

வாழ்வியல் மற்றும் மருத்துவக் கல்லூரியானது (University of Aberdeen College of Life Sciences and Medicine) ஸ்காட்லாந்திலுள்ள அபெர்டீன் பல்கலைக்கழகத்தின், மூன்று மருத்துவக்கல்வி சார்ந்த கல்லூரிகளில் ஒன்றாகும். இதில் மூன்று பள்ளிகள் உள்ளன. தற்போது, இக்கல்லுாாியின் தலைவராக பேராசிரியர் பில் ஹான்னாபோர்டு உள்ளார். இவர் ஒரு பொது சுகாதார ஆலோசகர் ஆவார்.[1]

பள்ளிகள்

தொகு

உயிரியல் பள்ளி

தொகு

உயிரியல் பள்ளியானது, விலங்கியலின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டிடம் கிங்ஸ் கல்லுாாி வளாகததில் உள்ளது. இதன் தற்போதைய தலைவராக பேராசிரியர் கிரேம் பேட்டர்ன் உள்ளார்.

மருத்துவம், மருத்துவ அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து பள்ளி

தொகு

மருத்துவம், மருத்துவ அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து படிப்பானது நான்கு நிறுவனங்களை பாரஸ்டெர்ஹில் வளாகத்தில் கொண்டுள்ளது:[1]

  • பயன்பாட்டு உடல்நல அறிவியல் நிறுவனம் (முன்பு இருந்த உயிர் மருத்துவ அறிவியல், மூலக்கூறு & செல் உயிரியல் மற்றும் உயிர் மருத்துவ இயற்பியல் மற்றும் உயிர் பொறியியல் - 2003 இல் இணைக்கப்பட்டது)
  • மருத்துவ அறிவியல் நிறுவனம்[2]
  • மருத்துவம் மற்றும் பல் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம்
  • ரோவல்ட் ஊட்டச்சத்து மற்றும் உடல்நல நிறுவனம்

இப்பள்ளியின் தலைவர் பேராசிரியர் ஸ்டீவ் ஹெயிஸ்.[1] இது 1497 இல் நிறுவப்பட்டது, இதுதான் முதன் முதலில் ஆங்கிலம் பேசக் கூடிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட மருத்துவப் பள்ளியாகும். கற்பித்தல்-கற்றல் வகுப்புகள் சட்டில் மையம், போல்வார்த் கட்டிடம் மற்றும் சுற்றியுள்ள மருத்துவமனைகளில்த்தில் நடைபெறுகின்றன.

பல்மருத்துவ பள்ளியானது ஜனவரி 2010 இல் திறக்கப்பட்டது. இது ஸ்காட்லாந்தில் உள்ள ஒரே பல்மருத்துவ பட்டப் படிப்பை வழங்கக் கூடிய பள்ளியாகும்.[3]

உளவியல் பள்ளி

தொகு

உளவியல் பள்ளியானது, வில்லியம் கில்ட் கட்டிடத்திலுள்ள கிங்ஸ் கல்லூரியில் அமைந்துள்ளது. இப் பள்ளியின் தலைவர் பேராசிரியர் அராஸ் சஹிரியே ஆவார்.[1]

பட்டதாாி பள்ளி

தொகு

இப் பள்ளியானது, வாழ்க்கை அறிவியல் மற்றும் மருத்துவ கல்லூரியை உள்ளடக்கியது. பாரஸ்டெர்ஹில் வளாகத்தில் போல்வார்த் கட்டிடத்தில் இயங்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "CLSM - People". University of Aberdeen. Archived from the original on 2 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 3 July 2017.
  2. "Institute of Medical Sciences". University of Aberdeen. பார்க்கப்பட்ட நாள் 4 July 2017.
  3. "Dental School". University of Aberdeen. பார்க்கப்பட்ட நாள் 4 July 2017.