விகிதமுறை வரி
விகிதமுறை வரி (Proportional tax) வருமான வரி விதிக்கும் முறைகளில் ஒன்று. வரி விதிக்கத்தக்கத் தொகை கூடினாலும் குறைந்தாலும் வருமான வரி விகிதம் மாறாது, நிலையாக இருக்கும் முறை விகிதமுறை வரிவிதிப்பு எனப்படுகிறது.[1] இந்த வரிவிதிப்பு முறையில் சராசரி வரிவிகிதமும் இறுதிநிலை வரிவிகிதமும் சமமாக இருக்கும்.[2][3]
தனிநபரின் வரிசெலுத்தும் ஆற்றலை இம்முறை கணக்கில் கொள்வதில்லை. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்கின்றது. இவ்வாறல்லாது, வரிவிதிக்கத்தக்கத் தொகைக்கேற்ப வரி விகிதம் மாறும் முறைகளும் (வளர்விகித வரி, தேய்வுவீத வரி) பயன்பாட்டில் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sommerfeld, Ray M., Silvia A. Madeo, Kenneth E. Anderson, Betty R. Jackson (1992), Concepts of Taxation, Dryden Press: Fort Worth, TX
- ↑ Hyman, David M. (1990) Public Finance: A Contemporary Application of Theory to Policy, 3rd, Dryden Press: Chicago, IL
- ↑ James, Simon (1998) A Dictionary of Taxation, Edgar Elgar Publishing Limited: Northampton, MA