விக்கிப்பீடியா:வரிசைப் பட்டியல்

(விக்கிப்பீடியா:அட்டவணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அட்டவணைகள் விக்கிப்பீடியாவின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த ஓர் சிறந்த வழியாகும். நீங்கள் மீயுரை வழியே அட்டணைகளை உருவாக்கிடும் நிரல்மொழி அறிந்திருந்தால் அவற்றை நேரடியாக நீங்கள் தொகுக்கும் கட்டுரையில் இடலாம். ஆனால் மீயுரை நிரல்மொழி (எச்.டி.எம்.எல்) அறியாதவர்களுக்கு அட்டவணை உருவாக்கிடத் தேவையான ஆணைச்சொற்களை இடுதல் கடினமாக இருக்கும். சில நேரங்களில் மிகவும் விவரமான அட்டவணைத் தயாரித்தல் வேண்டியிருக்காது; அந்நேரங்களில் ஓர் எளிய ஆணைச்சொற்கட்டு பயனாகலாம்.இந்தக் கட்டுரையில் விக்கிப்பீடியா கட்டுரைகளில் அட்டவணைகளை சேர்ப்பது குறித்தும் அவை எப்போது தேவைப்படும் என்றும் காணலாம்.

மீயுரையின் பயன்பாடு இப்போது தேவையுமில்லை;தவிர விரும்பப்படுவதுமில்லை. m:Help:Table விக்கி ஆணைச்சொற்களை கொண்டு எவ்வாறு அட்டவணை உருவாக்கலாம் என விளக்குகிறது.

Magnus Manske's coversion tool கருவி மூலம் மீயுரை அட்டவணைகளை எளிதாக விக்கிமொழி அட்டவணைகளாக மாற்றிடுக.

கருவிப்பட்டையை பயன்படுத்துதல்

தொகு
 


ஓர் அட்டவணையை தானாகவே உள்ளிட,தொகு கருவிப்பட்டையில்   (அட்டவணையை உள்ளிடு)பொத்தானை சொடுக்கிடுக. இந்த (அட்டவணையை உள்ளிடு) பொத்தான் கருவிப்பட்டையில் காணப்படவில்லையென்றால் விருப்பத்தேர்வுகளை மாற்றிக்கொள்ளும் முறைகளைப் பின்பற்றி சேர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் அட்டவணையை உள்ளிடு பொத்தானை சொடுக்கியவுடன் கீழ்வரும் அட்டவணை உள்ளிடப்படும்:

{|  class="wikitable" border="1"
|-
!  header 1
!  header 2
!  header 3
|-
|  row 1,  cell 1
|  row 1, cell 2
|  row 1, cell  3
|-
|  row 2,  cell 1
|  row 2, cell 2
|  row 2, cell  3
|}

எடுத்துக்காட்டு உரைகளான ("header 1" அல்லது "row 1, cell 1") போன்றவற்றை உங்கள் தரவுகள் மூலம் மாற்றிக்கொள்ளுங்கள்.

மீயுரை அட்டவணை நிரல் முன்மாதிரிகள்)

தொகு

மீயுரை கொண்டு அட்டவணைகளை உள்ளிடுவதை விக்கிப்பீடியா விரும்புவதில்லை. இதனைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறீர்கள். ஓர் முழுமைக்காகவே இவை கொடுக்கப்படுகின்றன.

பொதுவான எச்.டி.எம்.எல் நிரல்

தொகு
<table border="1" cellpadding="2">
<caption>பெருக்கல் அட்டவணை</caption>
<tr><th>பெருக்கல்</th><th>1</th><th>2</th><th>3</th></tr>
<tr><th>1</th><td>1</td><td>2</td><td>3</td></tr>
<tr><th>2</th><td>2</td><td>4</td><td>6</td></tr>
<tr><th>3</th><td>3</td><td>6</td><td>9</td></tr>
<tr><th>4</th><td>4</td><td>8</td><td>12</td></tr>
<tr><th>5</th><td>5</td><td>10</td><td>15</td></tr>
</table>

உலாவியில் காண்பது

தொகு
பெருக்கல் அட்டவணை
பெருக்கல்123
1123
2246
3369
44812
551015

இந்த எடுத்துக்காட்டில் கவனிக்கவேண்டியவை:

  • முழுமையான அட்டவணை <table ...>உடன் துவங்கி </table>உடன் முடிகிறது.
  • ஓர் தலைப்பு உங்கள் அட்டவணையை சுருக்கமாக விவரிக்கத் தேவைப்படுகிறது. அதனை caption ஆணைச்சொல்லிற்குள் ஆரம்ப <table> குறிச்சொற்களுக்கு அடுத்து இட வேண்டும்.
  • அட்டவணை கிடைவரிசை அட்டவணையில் கிடையாக உள்ள கட்டங்களின் வரிசையாகும். அவை <tr> உடன் துவங்கி விருப்பத்தேர்வாக </tr> உடன் முடிகின்றன.
  • அட்டவணை தலைப்புகள் தலைப்புகளைத் தாங்கியுள்ள கட்டங்களாகும். அவை பொதுவாக தடித்த எழுத்துக்களில் வடிவமைக்கப்படும். அவை <th> உடன் துவங்கி விருப்பத்தேர்வாக </th>உடன் முடிகின்றன.
  • அட்டவணை தரவு அட்டவணையின் பிற கட்டங்களில் நிரப்பப்படும் தகவல்கள். அவை <td> உடன் துவங்கி விருப்பத்தேர்வாக </td> உடன் முடிகின்றன.

td மற்றும் th கூறுகள் "கட்டங்கள்" என்றழைக்கப்படுகின்றன. ஓர் அட்டவணையில் உள்ள நெடுவரிசைகள் (column) எண்ணிக்கை சீராக இருக்க, ஒவ்வொரு கிடைவரிசையும்(row) மற்ற கிடைவரிசையில் உள்ள அதே அளவு கட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும்.(சில நேரங்களில் கட்டங்கள் பல கிடை வரிசைகளையோ நெடுவரிசைகளையோ உள்ளடக்கி இருக்கலாம்;அவை இங்கு உரையாடப்படவில்லை).வெறுமையான கட்டங்களுக்கு, வெற்றுக்கூறு "&nbsp;" வினை பயன்படுத்தவும்; இல்லையெனில் சில உலாவிகளில் அட்டவணை சரியாக வடிவமைக்கப்படாது.

உங்கள் அட்டவணை சரியாக காணப்படவில்லையெனில், அனைத்து மீயுரை குறிச்சொற்களும் ஒழுங்காக ஒன்றினுள் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறதா என்று சரிபார்க்கவும். எளிமைக்காக சில மீயுரை விருப்பத்தேர்வு முடிவுக்குறிகளை தவிர்க்கலாம். உங்கள் மீயுரை சொற்களை சரிபார்க்க மற்றும் பிழைகளை அறிய W3C ஆணைச்சொல் சரிபார்ப்பு சேவையை பயன்படுத்துங்கள். பெரிய,சிக்கலான அட்டவணைகளுக்கு பார்த்து பிழை திருத்துவதை விட இந்த சேவையைப் பயன்படுத்துவது எளிதாகும்.

மேற்கண்ட அட்டவணை விருப்பத்தேர்வுகள் இல்லாது இவ்வாறு காணப்படும்:

<table border="1" cellpadding="2">
<caption>பெருக்கல் அட்டவணை</caption>
<tr><th>&பெருக்கல்;<th>1<th>2<th>3
<tr><th>1<td>1<td>2<td>3
<tr><th>2<td>2<td>4<td>6
<tr><th>3<td>3<td>6<td>9
<tr><th>4<td>4<td>8<td>12
<tr><th>5<td>5<td>10<td>15
</table>

சுருக்கமாக இருப்பதுடன், பக்கத்தின் பராமரிப்பை எளிதாக்குகிறது.

நீங்கள் மீயுரையில் வல்லுனராக இருந்தால், thead, tbody, tfoot, மற்றும் colgroup கூறுகள் விக்கிப்பீடியாவில் வேலை செய்வதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

மற்றொரு முன்மாதிரி

தொகு

அட்டவணை உருவாக்குதலில் உள்ள பல விருப்பத்தேர்வுகளை காட்டும் விதமாக சற்றே சிக்கலான மாதிரி ஒன்று காட்டப்பட்டுள்ளது. இங்குள்ள அமைப்புகளை உங்களுக்குத் தகுந்தவகையில் கையாண்டு தேவைப்படும் மாற்றங்களைச் செய்து கொள்ளுங்கள். இந்த வழிமுறைகள் அனைத்துமே எப்போதும் தேவை என்றில்லை. நீங்கள் வண்ணங்களை பின்னணியில் சேர்க்கலாம் என்பதால் எல்லா நேரங்களிலும் சேர்ப்பது சரியாக இருக்காது. உங்கள் அட்டவணைகளை எவ்வளவு எளிதாக வைக்க முடியுமோ அவ்வளவு எளிதாக வைத்திருங்கள்... மற்ற பயனர்களும் உங்கள் கட்டுரைகளை தொகுக்கக் கூடும் என்பதையும் நினைவில் கொள்க !

மீயுரை நிரல்

தொகு
<table border="1" cellpadding="5" cellspacing="0" align="center">
<caption>'''அட்டவணை எடுத்துக்காட்டு'''</caption>
<tr>
<th style="background:#efefef;">முதல் தலைப்பு</th>
<th colspan="2" style="background:#ffdead;">இரண்டாம் தலைப்பு</th>
</tr>
<tr>
<td>மேல் இடது</td>
<td> </td>
<td rowspan=2 style="border-bottom:3px solid grey;" valign="top">
வலது பக்கம்</td>
</tr>
<tr>
<td style="border-bottom:3px solid grey;">கீழ் இடது</td>
<td style="border-bottom:3px solid grey;">கீழ் நடு</td>
</tr>
<tr>
<td colspan="3" align="center">
<table border="0">
<caption>''அட்டவணைக்குள் அட்டவணை''</caption>
<tr>
<td align="center" width="150px">[[Image:Wikipedia-logo-v2-ta.svg]]</td>
<td align="center" width="150px">[[Image:Wikipedia-logo-v2-ta.svg]]</td>
</tr>
<tr>
<td align="center" colspan="2" style="border-top:1px solid red; 
border-right:1px solid red; border-bottom:2px solid red; 
border-left:1px solid red;">
இரு விக்கிப்பீடியா சின்னங்கள்</td>
</tr>
</table>
</td>
</tr>
</table>

விக்கிப்பீடியா நிரல்

தொகு

{| border="1" cellpadding="5" cellspacing="0" align="center"
|+'''அட்டவணை எடுத்துக்காட்டு'''
|-
! style="background:#efefef;" | முதல் தலைப்பு
! colspan="2" style="background:#ffdead;" | இரண்டாம் தலைப்பு
|-
| மேல் இடது
|
| rowspan="2" style="border-bottom:3px solid grey;" valign="top" |
வலது பக்கம்
|-
| style="border-bottom:3px solid grey;" | கீழ் இடது
| style="border-bottom:3px solid grey;" | கீழ் நடு
|-
| colspan="3" align="center" |
{| border="0"
|+''அட்டவணைக்குள் அட்டவணை''
|-
| align="center" width="150px" | [[Image:wiki.png]]
| align="center" width="150px" | [[Image:wiki.png]]
|-
| align="center" colspan="2" style="border-top:1px solid red; border-right:1px solid red;
border-bottom:1px solid red; border-left:1px solid red;" | இரு விக்கிப்பீடியா சின்னங்கள்
|}
|}

உலாவியில் எவ்வாறு காட்சியளிக்கும் ?

தொகு
அட்டவணை எடுத்துக்காட்டு
முதல் தலைப்பு இரண்டாம் தலைப்பு
மேல் இடது

வலது பக்கம்

கீழ் இடது கீழ் நடு
அட்டவணைக்குள் அட்டவணை
   
இரு விக்கிப்பீடியா சின்னங்கள்

மேலும் ஓர் எடுத்துக்காட்டு (மீடியாவிக்கி நிரல்)

தொகு

புதிதாக அமைக்கப்படுள்ள விக்கிமீடியா நிரலைப் பயன்படுத்தி மேலுமொரு காட்டு. வழமையான மீயுரை நிரலைவிட எளிதானது. நிரல்வரிகள் மீயுரையைவிட(10-20%) குறைவாக உள்ளது. இணையத்தில் உள்ள எச்.டி.எம்.எல் விக்கி மாற்றியையும் பயன்படுத்திலாம்.

விக்கிப்பீடியா நிரல்

தொகு
{| border="1" cellpadding="2"
!பெயர்
!தாக்கம்
!எந்த விளையாட்டுகளில்
|-
|போக்பால்
|வழமையான போக்பால்
|அனைத்து பதிப்புகளிலும்
|-
|கிரேட் பால்
|போக்பாலை விட சிறந்தது
|அனைத்து பதிப்புகளிலும்
|-
|அல்ட்ரா பால்
|கிரேட் பாலைவிட சிறந்தது
|அனைத்து பதிப்புகளிலும்
|-
|மாஸ்டர் பால்
|எந்த போக்மானையும் தவறாது பிடிக்கும்.
|அனைத்து பதிப்புகளிலும்
|}

உலாவியில் காணப்படுவது

தொகு
பெயர் தாக்கம் எந்த விளையாட்டுகளில்
போக்பால் வழமையான போக்பால் அனைத்து பதிப்புகளிலும்
கிரேட் பால் போக்பாலை விடச் சிறந்தது அனைத்து பதிப்புகளிலும்
அல்ட்ரா பால் கிரேட் பாலைவிடச் சிறந்தது அனைத்து பதிப்புகளிலும்
மாஸ்டர் பால் எந்த போக்மானையும் தவறாது பிடிக்கும். அனைத்து பதிப்புகளிலும்

நெடுவரிசை அகலத்தை அமைப்பது

தொகு

ஓர் நெடுவரிசையின் அகலம் அதன் உள்ளடக்க உரையின் மிக நீண்ட அகலத்தைப் பொறுத்து அமையாது, நெடுவரிசை அகலத்தை உங்கள் விருப்பம்போல அமைக்க விரும்பினால் கீழ்காணும் எடுத்துக்காட்டை பின்பற்றவும். உரை தானாகவே அடிதழுவுதல் கட்டாயமாக்கப்படுள்ளது.

{| border="1" cellpadding="2"
!width="50"|பெயர்
!width="225"|தாக்கம்
!width="225"|எந்த விளையாட்டுகளில்
|-
|போக்பால்
|வழமையான போக்பால்
|அனைத்து பதிப்புகளிலும்
|-
|கிரேட் பால்
|போக்பாலைவிடச் சிறந்தது
|அனைத்து பதிப்புகளிலும்
|}
பெயர் தாக்கம் எந்த விளையாட்டுகளில்
போக்பால் வழமையான போக்பால் அனைத்து பதிப்புகளிலும்
கிரேட் பால் போக்பாலைவிடச் சிறந்தது அனைத்து பதிப்புகளிலும்

பண்புக்கூறளவுகளை அமைத்தல்

தொகு

கட்டத்தின் துவக்கத்தில் அதன் பண்புக்கூறளவை குறிப்பிட்டு ஓர் தனி '|' (pipe) குறியை இடவும். காட்டாக width=300px| என்று குறிப்பிட்டால் அந்தக் கட்டத்தின் அகலத்தை 300 பிக்செல் அளவிற்கு அமைக்கும். ஒன்றிற்கு மேற்பட்ட கூறளவுகளை அமைக்க ஒவ்வொன்றிற்குமிடையே ஓர் இடைவெளி விடவும்.

விக்கிப்பீடியா நிரல்

தொகு
{|
|-
| bgcolor=red|கட்டம்1 || width=300px bgcolor=blue|கட்டம்2 || bgcolor=green|கட்டம்3
|}

உலாவியில் எவ்வாறு காட்சியளிக்கும்

தொகு
கட்டம்1 கட்டம்2 கட்டம்3

எப்போது அட்டவணைகள் தேவை

தொகு

தரவுகளை கட்டங்களில் கிடை/நெடு வரிசையாக காட்சிப்படுத்த அட்டவணைகள் மிகச் சிறந்தவை. அத்தகைய சில:

  • கணித வாய்ப்பாடுகள்
    • பெருக்கல் வாய்ப்பாடு
    • வகுத்தல் காரணிகள் அட்டவணை
    • லுக் அப் அட்டவணைகள்
  • தகவல் பட்டியல்கள்
    • இரண்டு அல்லது பல மொழிகளில் ஒன்றின் பொருள்
    • நபர், பிறந்தநாள், தொழில்
    • கலைஞர், இசைத்தட்டு, ஆண்டு, பகுப்பு

பல நேரங்களில் பட்டியல்கள் பட்டியல்களாகவே விடப்படுவது சிறப்பாகும். சில கட்டுரைகளில் உள்ள பட்டியல்களை அட்டவணை வடிவில் அமைத்தால் அவற்றின் நீளம் மற்றும் சிக்கலான நிரல் காரணமாக பின்னாளில் தொகுப்பது கடினமாகும். நீங்கள் ஓர் பட்டியலை அட்டவணைப்படுத்து முன்னால் அதனால் காட்சிப்படுத்தல் எளிதில் புரியும் வண்ணம் அமைகிறதா என்று பார்க்கவும். ஆமெனில் அட்டவணைப்படுத்துதல் சிறந்ததாகும். அவ்வாறான பயன் எதுவும் இல்லையெனில், அட்டவணைப் படுத்தாது இருப்பதே நல்லது.

பக்க வடிவமைப்பிற்காக அட்டவசணைப்படுத்துதல் கூடாது. நீங்கள் தொகுக்கும் தரவுகள் ஓர் அட்டவணைக்கு சரியானதாக இல்லாவிடில், கட்டாயமாக அட்டவணைப்படுத்துதல் சிறப்பன்று. ஓர் நிழற்படத்தின் தலைப்பினை இட, இணைப்புகளின் தொகுப்பொன்றை சரியாக அமைக்க, பிற காட்சி இனிமைக்காக அட்டவணைப்படுத்தலை செய்யாதீர்கள். இது பிற விக்கிப்பீடியர்களால் தொகுப்பதை கடினமாக்குகிறது.

எப்போது அட்டவணைகள் தேவையற்றன

தொகு

மிக நீளமான பட்டியல்கள், அல்லது மிகச்சிறிய பட்டியல்கள்

தொகு

ஓர் பட்டியல் மிக நீளமாக இருந்தால்,அல்லது மிக எளிய பட்டியலாக இருந்தால், விக்கிப்பீடியாவின் பட்டியல் ஆணைக்குறிகளைப் பயன்படுத்துங்கள். நீண்ட பட்டியல்களை ஓர் அட்டவணைக்குள் பராமரிப்பது மிகவும் கடினமாகும். எளிய பட்டியல்களுக்கு அட்டவணையின் கட்டங்கள் சார்ந்த வடிவமைப்பு தேவையற்றது. பட்டியல்களை வைத்து அட்டவணைகளைத் தவிர்க்க சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணை வடிவமைப்பு (இவ்வாறு செய்யாதீர்கள்)

தொகு
1980அல்ட்ரா வேவ்
1988வாட்ஸ் பூட்சி டூயிங்?
1994பிளாஸ்டர்ஸ் ஆஃப் யுனிவெர்ஸ்
1994பிரெஷ் ஆவுட்டா பி யுனிவெர்சிடி

அட்டவணையின்றி (இவ்வாறு செய்க)

தொகு
  • 1980: அல்ட்ரா வேவ்
  • 1988: வாட்ஸ் பூட்சி டூயிங்?
  • 1994: பிளாஸ்டர்ஸ் ஆஃப் யுனிவெர்ஸ்
  • 1994: பிரெஷ் ஆவுட்டா பி யுனிவெர்சிடி

படிமங்களின் பக்கவடிவமைப்பு

தொகு

பல நேரங்களில் படிமங்கள் கட்டுரைகளில் அட்டவணை வடிவமைப்பை ஒட்டி காட்சிப்படுத்தப்படுகின்றன. அட்டவணைகள் மூலம் படிமத்தை பக்கத்தின் இடது அல்லது வலது புறம் வேண்டிய இடத்தில் காட்சிப்படுத்த ஒரு கட்ட அட்டவணைகள் பயன்படுத்தப்பட்டன. அவை பழைய உலாவிகளுக்குத் தேவையாகவும் இருந்தன. ஆனால் இன்று பெரும்பான்மையும் பயன்படுத்தப்படும் உலாவிகளில் நடைத்தாள்கள் (Cascading Style Sheets) பயனில் உள்ளதால் இது தேவையில்லை. இப்போது உள்ள நடைமுறை div நிரலைப் பயன்படுத்துவதாகும்.

மிக விவரமான வழிகாட்டல்களுக்கு, பார்க்க en:Wikipedia:Image use policy மற்றும் en:Wikipedia:Image markup gallery (இவை ஆங்கிலத்தில் உள்ளன). இருப்பினும் சில மாதிரிகள் இங்கு:

அட்டவணைப்படுத்தல் (செய்யற்க)

தொகு

<table align="right" border="0" cellpadding="0"><tr><td>[[Image:Saint John, Barbados 004.jpg]]</td></tr></table>

அட்டவணையின்றி (செய்க)

தொகு

[[Image:Saint John, Barbados 004.jpg|right|]]

எவ்வாறு காட்சிப்படுத்தப்படுகிறது

தொகு

இரண்டு வகையிலும் கிடைக்கும் பயன் ஒன்றே; படிமம் கணித்திரையின் வலதுபுறம் மிதக்கிறது, மற்றும் உரை படிமத்தைத் தழுவிச் செல்கிறது. உங்கள் உலாவியில் இவ்வாறு காட்சியளிக்கும் (உரையுடன்):

வாழைத்தோட்டங்களில் கன்றுகள் இரகத்தைப் பொறுத்து ஏக்கருக்கு 400-800 வீதம் நடப்படுகின்றன. வளர்ந்த பின் நிலத்தில் வெயில் படாதவாறு நெருக்கமாக நடுவது, களை வளர்வதைத் தடுக்கும். முளைக்கும் போது ஒரு கிழங்குக்கு இரு குருத்துகள் மட்டுமே வளர விடப்படுகின்றன. ஒன்று பெரியதாகவும், மற்றது 6-8 மாதங்களுக்குப் பின் பழம் தர வல்லதாயும் விடப்படுகின்றன. இவ்வாறு, ஒரே கிழங்கிலிருந்து தொடர்ந்து ஆண்டுதோறும் வேறு குருத்துக்கள் வளர்வதால் சில ஆண்டுகள் கழித்து முன்பு நட்ட இடத்திலிருந்து மரங்கள் சில அடி தூரம் தள்ளி இருக்கும். காற்றினாலோ,வாழைக்குலையைத் தாங்க முடியாமலோ மரங்கள் சாய்வதைத் தடுக்க இரு மரங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டுவதுண்டு.

வரக்கூடிய பிரச்சினைகள்

தொகு

தேவையான இடங்களில் அட்டவணை பயன்படுத்தினால் கூட பிரச்சினைகள் எழக்கூடும். நீங்கள் உங்கள் கட்டுரைகளில் அட்டவணைகளைப் பயன்படுத்தினால் கருத்தில் கொள்ள வேண்டிய சில:

  • பிறருக்கு,முக்கியமாக விக்கிப்பீடியாவிற்கு புதியவர்களுக்கு, அட்டவணைகளை தொகுப்பது கடினமாக இருக்கும். "இப்பக்கத்தைத் தொகு" பொத்தானை சொடுக்கி பின்வரும் தொகுப்புப் பெட்டியில் அவர்கள் காண்கின்ற புரியாத மீயுரை வரிகள் அவர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கலாம். உங்கள் அட்டவணைகளை சுருக்கமாகவும் எளிய வரிவடிவைக் கொண்டும் அமையுங்கள். இடையே "<!-- இந்தக் கட்டுரையின் உரையைத் தொகுக்க, அட்டவணையை தாண்டிச் செல்லவும். -->" போன்று (காட்சியில் வராத) விளக்கவுரைகள் கொடுப்பதும் புதியவர்களின் தன்னம்பிக்கைக்கு உதவும்.
  • சிறந்த மீயுரை வல்லுனர்களுக்கும் அட்டவணையை அனைத்து உலாவிகளிலும் சரியாகக் காட்சிபடுத்துதல் கடினமான செயலாகும். ஓர் சிறிய தட்டச்சுப் பிழையும் அட்டவணை காட்சியை மிக மோசமாக்கும். இதனைத் தவிர்க்க உங்களால் முடியலாம்; பின்னாள் பயனர்களும் இத்திறனைக் கொண்டிருக்க வேண்டும். சிறிய,எளிய வடிவமைப்பு இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கும்.
  • பெரிய அட்டவணைகள், நிறையத் தகவல்களுடன், சிறிய கணித்திரைகளில் வலது புறத்தில் வழிந்தோடும்; இது சில நேரங்களில்,(காட்டாக, தனிம அட்டவணை )எதிர்பார்க்கப்படுவது. ஓர் கட்டுரைக்கு மிகப் பெரிய அட்டவணை உருவாக்க விரும்பினால், கூடவே சிறிய கணித்திரைப் பயனர்களின் நன்மைக்காக சிறிய வடிவில் எளிய அட்டவணையொன்றையும் பதிப்பிக்கவும்.
  • எச்.டி.எம்.எல் சொற்கள் code, pre, அல்லது tt மூலம், அட்டவணையின் உள்ளே மாறா-அகல எழுத்துரு பாவித்திருந்தால் அது பக்கத்தைத் தேவைக்கும் கூடுதலாக அகலமாக்கும். ஆகவே, கூடுமானவரை மாறா-அகல எழுத்துருக்களை பயன்படுத்தாதீர்கள். அதேபோல பிரச்சினை அட்டவணைக்குள் ஓர் படிமத்தை (படிமங்களும் மாறா அகலத்தைக் கொண்டிருப்பதால்) உள்ளிட்டிருந்தாலும் நிகழும்.
  • கூடுதலான தகவல்களைக் கொண்டிருக்கும் கட்டங்களும் சில உலாவிகளில் காட்சிப்படுத்தலை பிரச்சினையாக்கும். முக்கியமாக, ஓர் பெரும் பத்தியை உள்ளடக்கிய கட்டம் உரை மட்டுமே காட்டும் லின்க்ஸ் போன்ற உலாவிகளில் சரியாகக் காட்டப்படுவதில்லை. இது தேவைப்படுவதாக இருக்கலாம், இருப்பினும் முடியுமானால், கட்டங்களில் இடப்படும் தரவுகளின் அளவை மட்டுப்படுத்தவும்.
  • சில உலாவிகளில் வலது புற ஒழுங்கமைந்த அட்டவணைகள் உரையை எல்லைவரை செல்ல அனுமதிக்கும். இது காண்பதற்கு அழகில்லாமல் இருக்கும். இத்தகைய நேரங்களில் அட்டவணைத் தலைப்பில் style = "margin-left: 0.5em;" என்று குறிப்பிடவும்.

வெளியிணைப்புகள்

தொகு