விக்கிப்பீடியா:அறிவுப் பகிர்வு
தொடர்பங்களிப்பாளர்கள் தாம் கற்றறிந்தவற்றை தமக்குள் பகிர்ந்துகொள்வதற்கான நேரடிச் சந்திப்பு நிகழ்வு.
நோக்கம்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துவரும் பயனர்கள், தொகுத்தலின் வெவ்வேறு பிரிவுகளில் தனித்திறன் கொண்டுள்ளனர். சில திறன்கள் எளிய நுட்பத்தைக் கொண்டிருந்தாலும், அனைவராலும் அறியப்படாமல் இருக்கின்றன.
எளிய தொகுத்தல் நுட்பங்களை அனைவரும் அறிந்துகொள்ள வைத்தல் இந்நிகழ்வின் நோக்கம் ஆகும். எதிர்காலத்தில் பங்களிக்கும் பயனர்களுக்கு உதவும் வகையில், இந்த நுட்பங்களை ஆவணப்படுத்துதல் கூடுதல் நோக்கம் ஆகும்.
அணுகுமுறை
தொகு- தெரிந்துகொள்ள வேண்டியவை குறித்தான பட்டியல் தயாரித்தல்.
- 20 முதல் 25 வரையிலான எண்ணிக்கையில் பயனர்கள் நேரடி நிகழ்வில் கலந்துகொள்ளுதல்.
- பயனர்கள் தொகுத்தல் நுட்பங்களை தமக்குள் பகிர்ந்துகொள்ளுதல்.
நிகழ்வு அமைப்பு
தொகு- பயனர்கள் தாம் செய்துவரும் தொகுத்தல் நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தல். (எடுத்துக்காட்டாக, 6 பயனர்கள் x 1 மணி நேரம் = 6 மணிகள்)
- பயனர்கள் தமக்குத் தேவைப்படும் உதவிகளைக் கோருதலும், அதற்குரிய உதவிகளைப் பெறுதலும். (எடுத்துக்காட்டாக 1 மணி நேரம்)
முன்னெடுப்புகள்
தொகு- விக்கிப்பீடியா:செயல்வழி திட்டமிடலுக்கான கூடல் 2025 நிகழ்வின் ஒரு பகுதி.