விக்கிப்பீடியா:எழுத்துப் பெயர்ப்பு முறைகள்
தமிழ் மொழியில் உள்ள எழுத்துப் பெயர்ப்பு முறைமைகளைத் திரட்டி தமிழ் விக்கிபீடியாவில் எழுத்துப் பெயர்ப்பு முறைகளை சீர்தரத்துக்குள் கொண்டுவருவது இத்திட்டத்தின் நோக்கமாகும். பிற மொழிச் சொற்களை எழுத்துப்பெயர்த்தல் தொடர்பாக மையப்படுத்திய கலந்துரையாடலை ஏற்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கங்களாகும். இங்கு எட்டப்படும் முடிவுகள் விக்கிபீடியாவீன் கட்டுரைகளில் காணப்படும் எழுத்துப் பெயர்ப்பு தொடர்பான ஐயங்களை நீக்க உதவும். மேலும் இங்கு எடுக்கப்படும் முடிவுகள் விக்கிபீடியா கையேடாக வெளியிடப்படலாம். இது எழுத்துப் பெயர்ப்பு பற்றி விளக்கமற்ற விக்கிபீடியர்களுக்கு உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
தேவை
தொகுஎழுத்துப்பெயர்க்கும் போது பல விக்கிபீடியர் சிக்கல்களை எதிர் நோக்கி வருகின்றனர். ஒரு மையப்படுத்திய முறைமை இல்லாத காரணத்தால் பலவாறான முறைகளை கைக்கொள்ளப்பட்டு வருகின்றன. விக்கிப்பீடியாவில் எழுத்துப் பெயர்ப்பு தொடர்பான விதிமுறைகளை தொகுத்து எழுத்துப் பெயர்ப்பு பற்றிய பரிட்சயமற்ற விக்கிபீடியர்களுக்கு உதவியாக வழங்கப்படுதல் வேண்டும்.
இயலாமை
தொகுஇத்திட்டத்தின் மூலம் எல்லா இடங்களிலும் முடிவுகள் எட்டப்படாமல் போகலாம். இங்கு எடுக்கப்படும் முடிவுகள் விக்கிபீடியாவுக்கு வெளியே உள்ளவற்றுக்கு சமாந்தரமாக இல்லாமல் இருக்கலாம்.
படிமுறை
தொகுபிரச்சினைகள் தோன்றும் போது இங்கு கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்படும்.
- பிற மொழி பலுக்கலை அடையாளம் காணல்.
- கிட்டிய தமிழ் பலுக்கலுக்கான எழுத்துப்பெயர்ப்பு பற்றிய உரையாடல்கள்.
- முடியுமான இடங்களில் கடைசி முடிவை எடுத்தல்.
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளிலும் இனிவரும் கட்டுரைகளிலும் முடிவை நடைமுறைப் படுத்தல்.
- கையேடு ஒன்றை உருவாக்குதல்.