விக்கிப்பீடியா:எழுத்துரு மாற்றம்
தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது இயல்பிருப்பாக Lohit Tamil எழுத்துரு காட்டப்படுகிறது. இது காண்பதற்கு உவப்பாக இல்லை என்றாலோ வாசிக்க இலகுவாக இல்லாவிட்டாலோ பின்வருமாறு எழுத்துருவை மாற்றலாம்.
- தளத்தின் இடப்பக்கப் பட்டையின் கீழே "மற்ற மொழிகளில்" என்று பகுதியின் பக்கத்தில் உள்ள பற்சக்கரத்தைச் சொடுக்குங்கள்.
- அடுத்து வரும் பெட்டியில் "Fonts" என்பதைச் சொடுக்கி "தமிழ் க்கு எழுத்துருவை தேர்வு செய்க" என்று உள்ள இடத்தில் Lohit Tamil என்பதற்குப் பதில் System font என்பதைத் தெரிவு செய்யுங்கள். பிறகு, "அமைப்புகளைப் பயன்படுத்து" என்ற பொத்தானை அழுத்துங்கள்.
- உங்களுக்கு ஒரு பயனர் கணக்கு உருவாக்கிக் கொள்வதன் மூலம் பல்வேறு கணினிகளிலும் இதே அமைப்புகளைப் பயன்படுத்த முடியும்.
இந்த எழுத்துரு மாற்றத்தால் நேரக்கூடிய வசதிக்குறைவுகளுக்கு வருந்துகிறோம். இதைச் சீராக்குவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். நன்றி.