விக்கிப்பீடியா:கட்டுரைகள் இயற்றுதலுக்கான வழிமுறைகள்

கட்டுரைகள் இயற்றுவதற்கு ஆங்கில விக்கிக் கட்டுரைகளையோ பிற மொழி விக்கிக் கட்டுரைகளையோ மூலமாக கொள்ளும் நிலையில், அருள்கூர்ந்து கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கையாளவும்

  • ஆங்கில விக்கி அல்லது பிற மொழிக் கட்டுரைகளை அப்படியே மொழிப்பெயர்ப்பதை முடிந்த அளவு தவிர்க்கவும். தகவல்களை உள்வாங்கிக்கொண்டு கருத்தைத் தமிழில் தக்க மாற்றங்களுடன் எழுதவும். எடுத்துக்காட்டாக கட்டுரையில் பயன்படுத்தப்படும் எடுத்துக்காட்டுகளை இந்தியத் துணைக்கண்ட சூழலுக்கு ஏற்றவாறு தரலாம்.
  • ஆ.வி அல்லது பிறமொழிக் கட்டுரையை மொழிப்பெயர்க்கும் முன்னர் அந்த கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் அந்தத் தலைப்பு குறித்த உரையாடல்களைப் பார்க்கவும்.
  • ஆ.வி அல்லது பிறமொழிக் கட்டுரை தரத்தில் இல்லாத நிலையில், கட்டுரையின் உள்ளடக்கத்தை ஒரு முறை சரிபார்க்கவும். இதற்கு அடிப்படை உயிரியல் புத்தகங்களையோ அல்லது தரமான பதிப்பகங்களின் வழி வெளியீடான ஆய்வு கட்டுரைகளையோ அல்லது நம்பக்கூடிய இணைய தளங்களை (நல்ல பல்கலைக்கழக பேராசிரியர்களின் பக்கங்களில் உள்ளதைப்) பயன்படுத்தலாம். தங்கள் ஐயங்களையும் இங்கு கேட்டுத் தெளிவு செய்து கொள்ளவும்.
  • மேற்கூறிய மூன்று தரத்தில் இருப்பினும் தங்களுக்கு ஏதேனும் கருத்துப்பிழைகள் இருப்பதாக தோன்றினால், மேற்கூறிய இணையதளங்களில் இருந்து தெளிவு பெறலாம்.
  • உயிரியல் சூத்திரங்கள் குறித்த கட்டுரைகள் இயற்றும் போது, சூத்திரத்தை குறித்த வரலாற்று விவரங்களை ஆ.வி.யில் பெறும் நிலையில், சூத்திரத்தை சுருக்கத்தை இயன்ற அளவுக்கு மூல சூத்திரத்தையே படித்துவிட்டு இயற்றுதல் நலம்.
  • கட்டுரைகளில் படிமத்தை சேர்க்க வேண்டும். இத்தொகுப்பில் வரும் கட்டுரைகள் பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேவையானதாக இருப்பதால் படிமங்கள் கட்டுரையை எளிதில் புரிந்து கொள்ள உதவும்.