விக்கிப்பீடியா:கவனிப்புப் பட்டியல்

(விக்கிப்பீடியா:கவனிப்பு பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தப் பக்கம் விருப்பமில்லாதப் பக்கம்;இருப்பினும் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும்.
நிகழ்காலத் தகவல்கள் காண இப்பக்கத்தின் மெடா-விக்கிமீடியா பதிப்பைப் பார்க்கவும்

புகுபதிகை செய்த பயனர்கள் தாங்கள் காணும் பக்கங்களின் பக்கப்பட்டையில் "கவனி" என்ற இணைப்பு உள்ளதைப் பார்த்திருக்கலாம். அந்த இணைப்பை சொடுக்கினால், அந்தப் பக்கமும் அதனுடைய பேச்சுப்பக்கமும் (நீங்கள் பார்த்துக்கொண்டிருந்தது பேச்சுப்பக்கம் என்றால் பேச்சுப்பக்கமும் அதனுடன் இணைந்த கட்டுரைப்பக்கமும்) நீங்கள் "கவனி"க்கும் பக்கங்களின் தொகுதியில் சேர்க்கப்படும். இந்தப் பக்கங்களின் தொகுதியை நீங்கள் பக்கத்தின் மேல்புறமுள்ள கீற்றுகளில் உள்ள "என் கவனிப்புப் பட்டியல்" இணைப்பைக் கொண்டு அல்லது பக்கப்பட்டையில் உள்ள "சிறப்புப் பக்கங்கள் வரிசைத்தேர்வில் "என் கவனிப்புப் பட்டியல்" மூலமாகவும் அணுகலாம். இது நீங்கள் கவனிக்கும் பக்கங்களுக்கு உங்களுக்கேயான அண்மைய மாற்றங்கள் போன்று செயல்படுகிறது. இது அனைத்து கவனிக்கப்படும் பக்கங்களின் பட்டியலையும், நேரப்படி பின்னோக்கித் தருகிறது. வேண்டுகின்ற இறுதிநேரத்தை விருப்பத்தேர்வாக அமைக்கலாம்.

தங்கள் கவனிப்புப் பட்டியலில் 1000 பக்கங்களுக்குக் குறைவாக கொண்டுள்ளப் பயனர்களின் கவனிப்புப் பட்டியலுக்கான இறுதி நேரம், இயல்பிருப்பாக, மூன்று நாட்களும், 1000 பக்கங்களுக்குக் கூடுதலாக கவனிக்கின்ற பயனர்களின் கவனிப்புப் பட்டியல் 12 மணி நேரமுமாக உள்ளது.

ஒவ்வொரு வரியும் கடைசித் தொகுப்பின் விவரங்களை பதிகிறது: நாள், சிறு தொகுப்பா அல்லது பெரியதா, நேரம், பக்கத்திற்கான இணைப்பு, தற்போதைய பதிப்பிற்கும் கடைசிக்கு முந்திய பதிப்பிற்கும் உள்ள வேறுபாடு, வரலாறு, பயனர் பெயர் மற்றும் தொகுத்தல் சுருக்கம்

ஒவ்வொரு தொகுக்கபடும் பக்கத்திற்கும் கடைசி தொகுப்பின் தகவல்களேக் காட்டப்படுகின்றன என்பதை நிலைவில் கொள்க. காட்டாக, கடைசி தொகுப்பு சிறுதொகுப்பாக இருந்தால் அதற்கு முன்னர் பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தியிருந்தாலும் காட்டப்படுவதில்லை. ஒருவர் கடைசியாகப் பார்த்தபிறகு ஏற்பட்ட அனைத்து மாற்றங்களையும் பார்க்க வரலாற்றினைப் பார்க்கவேண்டும்.

அண்மைய மாற்றங்கள் மற்றும் விரிவான அண்மைய மாற்றங்கள் பக்கங்களில், கவனிக்கப்படும் பக்கங்கள் தடித்த எழுத்தில் காட்டப்படுகின்றன. ஆகவே, "என் கவனிப்புப் பட்டியல்" பாவிக்காமல் இருந்தாலும் பக்கங்களை கவனிப்புப் பட்டியலில் இடுவது பயனுள்ளது.

வினோதமாக, கவனிக்கப்படும் பக்கத்தின் நீக்கம் கவனிப்புப் பட்டியலில் காட்டப்படுவதில்லை! இருப்பினும், நீக்கல் பதிகைகளை கவனித்து வரலாம்.

கவனி மற்றும் கவனிப்பு நீக்கு

தொகு

"கவனி" அல்லது "கவனிப்புநீக்கு" இணைப்புகள் புகுபதிகை செய்த பயனர்களுக்கு பக்கப்பட்டையில் அல்லது பார்க்கப்படும் பக்கத்தின் மேல்புற கீற்றுகளில் உள்ளது.

ஓர் பக்கத்தைத் தொகுக்கும்போதும் அந்தப் பக்கத்தை கவனிக்குமாறு தேர்தெடுக்கலாம்:

தொகுப்புப் பெட்டியில், "இது ஒரு சிறுதொகுப்பு" கட்டத்தை அடுத்து, "இக்கட்டுரையைக் கவனிக்கவும்" கட்டம் உள்ளதைக் காணலாம். இதில் குறியிடுவதன் மூலம் மேலே குறிப்பிட்டவாறே அப்பக்கம் கவனிப்புப் பட்டியலில் சேர்க்கப்படும். ஓர் கவனிக்கப்படும் பக்கத்தை பார்வையிடும்போது "கவனி" இணைப்பு இருந்த இடத்தில் "கவனிப்புநீக்கு" என மாறியிருப்பதைக் காணலாம். அதனைச் சொடுக்கி அந்தப் பக்கத்தை(இணைந்த பேச்சுப்பக்கத்துடன்) உங்களின் கவனிப்புப் பட்டியலிலிருந்து நீக்கலாம்.

தவிர, உங்கள் பயனர் விருப்பத்தேர்வுகளில் "உங்கள் கவனிப்புப் பட்டியலில் தொகுக்கும் பக்கங்களைச் சேர்க்கவும்" என்பதனைச் செயலாக்கலாம்.

தலைப்பிலுள்ள என் கவனிப்புப் பட்டியல் மூலம் உங்கள் கவனிப்புப் பட்டியலை நேரடியாகவும் தொகுக்கலாம்.(தவிர இங்கும்: பட்டியலைக் காட்டவும் தொகுக்கவும் செய்யலாம்). உங்கள் முழு கவனிப்புப் பட்டியல் அகரவரிசையில் காட்டப்படும். அந்தப் பட்டியலிலிருந்து ஒரேமுறையில் பல கட்டங்களைத் தெரிவு செய்து பல பக்கங்களை கவனிப்பிலிருந்து நீக்க முடியும்.