விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/கணினியில் தமிழ்

  • இந்தக் கட்டுரை ஒரு வரலாற்றுக் கட்டுரை. மிகவும் அண்மிய கால வரலாற்றை தர முனைகின்றது. ஆகையால் தகுந்த மேற்கோள்கள் தருவது நன்று. குறைந்தது 3-5 மேற்கோள்கள் தருதல் நன்று.
  • பல உள் இணைப்புகளுக்கு கட்டுரைகள் ஏற்கனவே இருக்கின்றன. இருப்பினும் இணைப்பு சிகப்பாகவே இருக்கின்றது அது சரிப்படுத்தப்பட வேண்டும்.
  • செல்வா குறிப்பிட்டது போல் கட்டுரையில் சில தகவல்கள் விடுபட்டுள்ளன. அவற்றையும் சேர்க்க வேண்டும். செல்வா அவர்களும் தமது குறிப்புகளை இங்கு சேர்க்கலாம்.
  • மெய்பார்க்கப்பட வேண்டும். அமைப்பும் சற்று மேம்படுத்தப்படலாம் போல தெரிகின்றது.

--Natkeeran 16:12, 12 ஜனவரி 2007 (UTC)


நற்கீரன், உங்கள் பரிந்துரைகளுக்கு நன்றி. விக்கியில் அனுபம் இல்லாததால் சில கேள்விகள் கீழே.

  • எவற்றிற்கு மேற்கோள்கள் தேவை என்று சுட்டிக் காட்டினீர்களாயின் நான் முயற்சிக்கிறேன்.
  • சிவப்பு இணைப்புக்களை திருத்தி விடுகிறேன்.
  • செல்வாவின் தகவல்கள் விரைவில் சேர்க்கப் பட்டால் நல்லது, முடியாவிட்டால் அதற்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. அவை பின்னரும் சேர்க்கப் படலாம்.
  • மெய்பார்க்க்ப் படல் வேண்டியது எப்படி யாரால் என்று சொன்னால் உதவியாக இருக்கும்.
  • அமைப்பில் மாற்றங்களுக்கு உங்கள் பரிந்துரைகளை முன் வையுங்கள்.

அன்புடன், --Jeyapal 14:58, 16 ஜனவரி 2007 (UTC)